Squid Game 2: ஜெயிச்சா பணம்..இல்லையினா பிணம்! வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்! எப்போ ரிலீஸ் தெரியுமா
டெல்லி: கொரோனா காலகட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த உலகமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டு இருந்த காலகட்டத்தில் வெளியானதுதான் ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை ஸ்க்விட் கேம் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. மேலும் ஸ்க்விட் கேம் சீசன் 2-வின் டீசரையும் வெளியிட்டுள்ளது.
ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான தென்கொரிய நாட்டு வெப் சீரிஸ் ஆகும். இந்த வெப் சீரிஸின் கதை, யாருக்கெல்லாம் அதிக கடன் இருக்கின்றதோ, அவர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டு பணத்தை வென்று அவர்களது கடனை அடைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வருகின்றது. மேலும் விளையாட்டின் விதிகளில் இருந்து சிறிய தவறு நடந்தாலும் அவர்களுக்கு தண்டனையாக அவர்கள் உடனே கொல்லப்படுவார்கள்.

இந்த விளையாட்டில் கலந்து கொள்ள மொத்தம் 456 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பிக்பாஸ் வீட்டினைப் போல் மிகப்பெரிய வீட்டில் அனைவரும் தங்கவைக்கப்படுவார்கள். அவர்களுக்கு சிறிய குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகள்தான் போட்டிகளாக நடத்தப்படும். போட்டியில் வெல்பவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்காத அளவிலான பணத்தினைத் தருவார்கள். இறுதிவரை எத்தனை பேர் இந்த போட்டியில் தாக்குப் பிடித்தனர் என்பதுதான் கதை.

சீசன் 3: ஸ்க்விட் கேம் எழுத்தாளர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் ஸ்க்விட் கேம் சீசன் 2 பற்றி கூறியுள்ளார், "நாங்கள் சீசன் 2 படப்பிடிப்பைத் தொடங்கிய முதல் நாளில், , உண்மையிலேயே, நீங்கள் மூன்று வருடங்களுக்குப் பிறகு ஸ்க்விட் கேம் வெப் சீரிஸுக்கு திரும்புவது எப்படி இருக்கும் என்று எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

சீசன் 1 முடிவில் பழிவாங்குவதாக சபதம் செய்த சியோங் கி-ஹன் திரும்பி வந்து மீண்டும் கேமில் இணைகிறார். பழிவாங்குவதில் அவர் வெற்றி பெறுவாரா? ஃப்ரண்ட் மேன் இம்முறையும் எளிதான எதிரியாக இருக்கமாட்டார். கடந்த முறை இருந்ததை விடவும் மிகவும் மோசமாக இருப்பார். எனவே சீசன் 2 உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கின்றேன். அடுத்த ஆண்டு சீசன் 3 வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.

எப்போது ரிலீஸ்: ஸ்க்விட் கேம் சீசன் 2 வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதாவது கிருஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்த ஆண்டு சீசன் 3 ரிலீஸ் ஆகும் என ஸ்குவிட் கேம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்க்விட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











