Squid Game 2 Review: ஒண்ணா நம்பர் வில்லன்.. ஸ்க்விட் கேம் 2 விமர்சனம்.. மிரட்டியதா? உருட்டியதா?

சென்னை: Squid Game Season 2 Review - தென் கொரியாவில் கடன் தொல்லையால் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் மனிதர்களை கடத்திக் கொண்டு ஒரு ரகசிய தீவில் சிறு வயதில் அவர்கள் விளையாடிய விளையாட்டுக்களை விளையாட சொல்வதும், அந்த விளையாட்டில் தோற்றுவிட்டால் சுட்டுக் கொல்வதுமாக முதல் சீசனே திகிலை கிளப்பி உலக ரசிகர்களை ஒன்று திரட்டி பார்க்க வைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதன் 2வது சீசனுக்காக ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்து வந்த நிலையில், டிசம்பர் 26ம் தேதியான நேற்று ஸ்க்விட் கேம் 2 வெப்சீரிஸ் 7 எபிசோடுகளுடன் வெளியானது. 7 எபிசோடுகள் என்றதுமே எப்படியோ நட்டாத்தில் விட்டு விட்டு அடுத்த சீசனுக்காக அடுத்த வருடம் வரை காத்திருக்க வைக்கப் போகின்றனர் என நினைத்து வெப்சீரிஸ் பார்க்க ஆரம்பித்ததை போலவே 7வது எபிசோடில் தலையை பிய்த்துக் கொள்ளும் இடத்தில் சீசனை முடித்துவிட்டார் இயக்குநர் ஹுவாங் டாங் ஹுயூக் (Hwang Dong Hyuk).

ott squid game 2 squid game 2 review 2

செம்பட்டை தலையுடன் முதல் சீசனில் கடைசி வரை விளையாடி அத்தனை கோடி பணத்தையும் அள்ளிக் கொண்டு ராஜா போல ஹீரோ சியாங் ஜி ஹுன் (Lee Jung Jae) அந்த விமானத்தில் ஏறி வசதியாக வாழப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானத்தில் ஏறாமல் வில்லனை தேடிப் பிடிக்கப் போவதாக அறிவிக்கும் இடத்தில் முதல் பாகம் முடிந்த நிலையில், இரண்டாம் பாகம் அந்த இடத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளது அருமை. ஸ்க்விட் கேம் சீசன் 2 ரசிகர்களை கவருமா? கவராதா? என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஸ்க்விட் கேம் சீசன் 2 கதை: முதல் சீசனில் அந்த வில்லன் தாத்தா உயிரிழந்த நிலையில், அவருக்கு அடுத்து இருக்கும் இன்னொரு மெயின் வில்லனை எப்படியாவது கண்டுபிடித்து இன்னொரு கேம் நடக்கக் கூடாது என்று தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய்து வலை வீசி தேடுகிறார் ஹீரோ சியாங் ஜி ஹுன். பக்காவாக பிளான் செய்து கடவாய் பல்லில் டிராக்கர் எல்லாம் செட் செய்துக் கொண்டு மறுபடியும் கேமிற்கு செல்லும் ஹீரோ அந்த ஆட்டத்தை பற்றி மற்றவர்களுக்கு சொல்லி புரிய வைத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது தான் 2வது சீசனின் கதை.

ott squid game 2 squid game 2 review 2

பணம் பத்தும் செய்யும்: ஆனால், பச்சை வந்தால் சென்றிடு, சிகப்பு வந்தால் நின்றிடு என முதல் சீசனில் மிரட்டிய அதே கொலைகார பொம்மை முதல் கேமில் வர அது சுட்டுக் கொல்லும் வரை ஹீரோ சொல்வது யார் காதிலும் விழவில்லை. தனது பல்லில் இருக்கும் டிராக்கரை வைத்து தனது டீம் ஆயுதங்களுடன் வந்து காப்பாற்றிவிடுவார்கள் என நினைத்த ஹீரோவுக்கு அவர் வாயில் இருந்த டிராக்கரையும் வில்லன் பிடுங்கிவிட்டது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். முதல் விளையாட்டுக்குப் பிறகு ஹீரோ ஏற்கனவே இந்த விளையாட்டை விளையாடினார் என்று தெரிந்துக் கொள்ளும் மற்ற போட்டியாளர்கள் ஆட்டத்தை நிறுத்த முன் வருகின்றனர். ஆனால், அங்கே தலைக்கு மேல் வந்து காட்சியளிக்கும் கண்ணாடி பிக்கி பேங்கில் கொட்டும் பணத்தை பார்த்ததும் மனம் மாறி விளையாட்டை தொடர்கின்றனர்.

ஒண்ணா நம்பர் வில்லன்: இந்த முறை 456 என்கிற கடைசி நம்பரில் ஹீரோ இருக்க, நம்பர் ஒன் ஜெர்சியை அணிந்துக் கொண்டு மெயின் வில்லனே (Lee Byung Hun) வேடிக்கை பார்க்காமல் இவர்களுடன் களத்தில் வந்து விளையாடுவது ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். வயதான பாட்டி, வயிற்றில் குழந்தையுடன் கர்ப்பிணி. உயிர் நண்பனை காப்பாற்ற போராடும் ஹீரோ என ஏகப்பட்ட மனித உணர்ச்சிகளையும் பணத்தை விட உயிர் முக்கியம் என ஒவ்வொருவருக்கும் ஹீரோ எடுத்துச் செல்ல ஹீரோவை முந்திக் கொண்டு வில்லன் நல்லவனாக நடித்து இவர்களை தனது வலையில் விழ வைக்கும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட்.

ott squid game 2 squid game 2 review 2

பார்க்கலாமா? வேண்டாமா?: முதல் 2 எபிசோடுகளை சிறப்பாக கொடுத்தாலும் அவை தேவை இல்லாத ஆணியாகவே மாறிவிடுகின்றன. ஸ்க்விட் கேம் விளையாட்டுக்குள் ஹீரோ மீண்டும் வரும் இடத்தில் தான் கேம் சூடு பிடிக்கிறது. ஆனால், இந்த சீசன் இறுதி வரையிலும் ஹீரோவின் கை ஓங்காமல் வில்லன் கை ஓங்கி இருப்பதும் அந்த கடைசி சீனில் ஹீரோவுக்கு என்ன ஆகிறது என்பதும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்கிறது. கொஞ்சம் கூட போரடிக்காத வகையில் தமிழ் டப்பிங்கையும் தரமாக கொடுத்துள்ளனர். ஆபாச காட்சிகள் இல்லை என்றாலும், அந்த ராப்பராக வரும் நபர் பேசும் கெட்ட வார்த்தைகள் அதிகம் என்பதால் குழந்தைகள் இந்த வெப்சீரிஸை பார்க்க வைக்க வேண்டாம். மற்றபடி இந்த புத்தாண்டை கொண்டாட ஒரு அட்டகாசமான வெப்சீரிஸாகவே ஸ்க்விட் கேம் புதிய விளையாட்டுகளுடன் இடம்பெற்று கவனம் ஈர்க்கிறது. அந்த ஃபைனல் சீசனை சீக்கிரம் போட்டுவிடுங்கப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X