Squid Game 2: பேராசை யாரை விட்டது.. மிரட்டும் ஸ்குவிட் கேம் 2 டீசர்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்குவிட் கேம் வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்புடன் அதன் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது. உலகளவிலான ஓடிடி ரசிகர்களை உறைய வைத்த முதல் சீசன் பணத்தாசை காரணமாக விளையாட வரும் நபர்களை ஆட்டத்தில் தோற்றால் ஒரிஜினலாக இந்த உலகத்தை விட்டே எலிமினேட் செய்து நவீன யுக கிளேடியேட்டரை அரங்கேற்றும் கொடுமையான நபரின் கதையாக இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் சீசனில் முதல் நபராக விளையாடிய அந்த வயதான தாத்தா தான் மெயின் வில்லனே என்பது போல காட்டியிருப்பார்கள். ஆனால், அவரை தாண்டி இன்னொரு நபரும் இந்த ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறார் என்றும் அங்கிருந்து தப்பித்து வெளியேறும் நாயகனுக்கு மீண்டும் விளையாட அழைப்பு வருவதோடு முதல் சீசனை முடித்திருப்பார்கள்.

ஸ்குவிட் கேம் விளையாட்டை நிஜமாகவே நடத்தி ரசிகர்களின் நிலைப்பாட்டையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒரு ஆவணப்படமாக வெளியிட்டு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஸ்குவிட் கேம் 2வுக்காக காத்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 26ம் தேதி வெளியாகப்போவதாக டீசருடன் அறிவித்துள்ளனர்.
மரண விளையாட்டு: இந்த விளையாட்டை வேண்டாம் என்று வாக்களித்தால் விளையாட தேவையில்லை. ஆனால், தலைக்கு மேலே கண்ணாடி பெட்டியில் கொட்டப்படும் கோடிக்கணக்கான பணத்தை பார்த்து விட்டால் வாழ்க்கையில் வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் தென் கொரியர்கள் பேராசை காரணமாக விளையாட முன் வந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் மரண விளையாட்டு வெப்சீரிஸ் தான் இந்த ஸ்குவிட் கேம். முதல் சீசன் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.
டீசர் எப்படி இருக்கு?: முதல் சீசனில் ஹீரோவாக நடித்த லீ ஜுங் ஜே இந்த சீசனிலும் தனது விளையாட்டை மீண்டும் தொடர்கிறார். விளையாட உள்ளே வந்திருக்கும் நபர்களிடம் முடிந்த வரை இந்த விளையாட்டை விட்டு விட்டு வீட்டுக்குப் போகும் வழியை பார்க்க சொல்கிறார். ஆனால், அவரது பேச்சை சுத்தமும் மதிக்காமல் போட்டியாளர்கள் விளையாட விருப்பம் தெரிவித்து ஓட்டுப் போட்டு தங்களுக்கான சாவு மணியை தாங்களே அடித்துக் கொள்கின்றனர். ஏற்கனவே நான் இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறேன். இதனால், உங்களுக்கு பணம் கிடைக்காது. உங்கள் உயிர்தான் போகும் என எவ்வளவோ ஹீரோ எச்சரித்தாலும் மற்றவர்கள் கேட்காத நிலையில், என்ன நடக்கிறது. ஹீரோ அந்த வில்லனை கண்டுபிடிக்கிறாரா? இந்த விளையாட்டுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா என்கிற பரபரப்புடன் டீசர் காட்சிகள் தெறிக்கின்றன.
கிறிஸ்துமஸ் ரிலீஸ்: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் பண்டிகை விடுமுறையை குறிவைத்து இந்த ஓடிடி வெப்சீரிஸின் 2வது சீசன் டிசம்பர் 26ம் தேதி வெளியாகிறது. ஹ்வாங் டோங்-ஹியூக் முதல் சீசனை விட மிரட்டலாக 2வது சீசனை உருவாக்கியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நெட்பிளிக்ஸ் ஓடிடியை மீண்டும் ரசிகர்கள் ரீசார்ஜ் செய்யும் நேரம் வந்து விட்டது என்றே பலரும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். பெரிய புரமோஷனுடன் இந்த வெப்சீரிஸை இந்திய ரசிகர்கள் மத்தியிலும் கொண்டு சேர்க்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











