'Squid Game: The Challenge' Review: இப்படியாடா சோதிப்பீங்க.. ’ஸ்குவிட் கேம் தி சேலஞ்ச்’ விமர்சனம்!

லண்டன்: கொரியன் வெப்சீரிஸாக வெளியாகி உலகையே கதி கலங்க வைத்த ஸ்குவிட் கேம் வெப்சீரிஸின் அடுத்த பாகம் என்கிற அறிவிப்புடன் வெளியாகி உள்ள ஸ்குவிட் கேம்: தி சேலஞ்ச் வெப்சீரிஸ் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

இங்கிலாந்தில் வெள்ளையர்கள் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோவாக இந்த ஸ்குவிட் கேம் ஆரம்பிக்கிறது. முதல் எபிசோடு ரெட் லைட், க்ரீன் லைட் கேமும் அந்த பெரிய பொம்மையையும் காட்டும் போதே சூடு பிடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

Squid Game: The Challenge Review in Tamil

கடனில் தத்தளிக்கும் கொரியர்களை அழைத்துச் சென்று அவர்களை விளையாட வைத்து சாகடிக்கும் முதல் சீசன் ஆரம்பத்திலேயே பதை பதைக்க வைத்த நிலையில், ஸ்குவிட் கேம் தி சேலஞ்சில் அந்த ஹீரோவும் இல்லாத நிலையில், புதிய முகங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. அதே போல விளையாட்டில் எலிமினேட் ஆனால், கருப்பு இங்க் பட்டு அவுட் ஆவதாகவே காட்டுகின்றனர். உயிர் இறப்பதை பெரிதாக காட்டாதது பெரிய மைனஸாக மாறியிருக்கிறது.

அதே கேம் அதே செட்: ஸ்குவிட் கேம் சீசன் 1ஐ போலவே உருவாக்குகிறோம் என்கிற பெயரில் அதே கேம் அதே செட் போட்டு ஷோ நடக்கிறது. ஆனால், இது ஒரு ரியாலிட்டி கேம் ஷோ போல நினைத்துக் கொண்டு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் தான் போட்டியாளர்கள் உள்ளே செல்வதாக காட்டுகின்றனர். ஆனால், போட்டியாளர்கள் எலிமினேட் ஆகும் போது எந்தவொரு பதைபதைப்பும் மற்றவர்களுக்கு இல்லாமல் எலிமினேட் ஆனால் நமக்கு எக்ஸ்ட்ரா 10 ஆயிரம் டாலர் கிடைக்கும் என்கிற சந்தோஷத்துடன் முன்னேறுவது எல்லாம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தையும் மனித தன்மையையும் கேள்விக் குறியாக மாற்றுகிறது.

ரொம்ப போர்: இதுவரை 5 எபிசோடுகள் Red Light, Green Light, The Man with the Umbrella, War, Nowhere to Hide, Trick or Treat உள்ளிட்ட எபிசோடுகள் தமிழ் மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி உள்ளது. ஆனால், டப்பிங் சிங்க் ஆகவில்லை. வெப்சீரிஸில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் ஏதோ பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது போல செம போர் அடிக்கிறது. 456 ரியல் பிளேயர்களை வைத்து இந்த ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை அப்படியே வெப்சீரிஸாக வெளியிட்டுள்ளதால் தான் சுவாரஸ்யம் பெரிதாக இல்லை என்றும் கூறுகின்றனர்.

முதல் இரண்டு எபிசோடுகள்: இதுவரை ஸ்குவிட் கேம்: தி சேலஞ்ச் வெப்சீரிஸின் முதல் 2 எபிசோடுகளில் ரெட் லைட், க்ரீன் லைட் ஆட்டமும், இரண்டாவது எபிசோடில் டல்கோனா விளையாட்டும் நடக்கிறது. ஆனால், இரண்டு எபிசோடுகளுமே சுவாரஸ்யமே இல்லாத ஷோவாக நகர்கிறது. ஸ்குவிட் கேம் சீசன் ஒன்றில் நடித்த ஹீரோ உள்ளிட்ட மற்ற நடிகர்கள் இதில் வருவார்களா? ஆட்டம் திசை மாறுமா என்பதை வெயிட் பண்ணித் தான் பார்க்க வேண்டும். ஆனால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ஸ்குவிட் கேம் 2 பெரிதாக எடுபடவில்லை என்றே தெரிகிறது. சந்திரமுகி 2 என வைத்துக் கொண்டு சந்திரமுகி படத்தை கெடுத்தது போல ஸ்குவிட் கேம் பெயரை வைத்து முதல் சீசனையே கெடுத்து விட்டது போல உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X