Sshhh Season 3 Release Date: ஷ் சீசன் 3 ரிலீஸ் தேதி வந்தாச்சு.. அடேங்கப்பா இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்களா?
சென்னை: சினிமா உலகில் எப்போதுமே கமர்சியல் படங்களுக்கும், த்ரில்லர் கதைகளுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால், ஓடிடி (OTT) தளங்களின் வருகைக்குப் பிறகு, ரசிகர்களின் ரசனை முற்றிலும் வேறு தளத்திற்கு மாறிவிட்டது. குறிப்பாக, உறவுகளின் சிக்கல்கள், போல்டான வாழ்வியல் மற்றும் அடல்ட் ரகசியங்களை மையமாகக் கொண்டு வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஏகோபித்த வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஓடிடி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த 'Sshhh' (ஷ்...) அந்தாலஜி வெப் சீரிஸ், தற்போது தனது அடுத்த அதிரடி சீசன் ரிலீஸ் ஆகவுள்ளது.
பிரபல ஓடிடி தளமான 'ஆஹா' (aha)-வில் வெளியான 'Sshhh' சீசன் 1, ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா, ஐஸ்வர்யா தத்தா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த அந்த சீசனில், செக்ஸ் எஜுகேஷன், முன்னாள் காதலர்களின் மறுசந்திப்பு, நடுத்தர வயது காதல் எனப் பல போல்டான மற்றும் எதார்த்தமான கதைகளை மிகத் தைரியமாகப் பேசி, இணையவாசிகள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறியது.

மில்லியன் கணக்கான வியூவ்ஸ்: அதனைத் தொடர்ந்து, முதல் பாகத்தை விட இன்னும் கூடுதல் போல்டுடன் வெளியான சீசன் 2, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது. பிரேம்ஜி, வேதிகா, வெற்றி மற்றும் ஜினல் ஜோஷி ஆகியோர் நடித்த இந்த சீசனில், 'கால் பாய்' (Gigolo) கலாச்சாரம், ரகசிய வீடியோக்கள் லீக் ஆவதால் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் அவமானங்கள் மற்றும் அதற்கு எதிரான போராட்டங்களை அக்குவேறாக ஆணிவேறாகப் படம் பிடித்துக் காட்டியது. இந்த இரண்டு சீசன்களுமே ரிலீஸான சில நாட்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் புதிய டிஜிட்டல் சாதனைகளைப் படைத்தன.
மூன்றாவது சீசன் ரெடி: "கடந்த இரண்டு சீசன்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமாகவும், இதுவரை தமிழ் ஓடிடி உலகம் கண்டிராத உச்சக்கட்ட போல்ட் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளுடனும் 'Sshhh' சீசன் 3 வரவுள்ளது. இதற்கான போஸ்டர்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி, தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் காட்டுத்தீயாய் எகிற வைத்துள்ளது. குறிப்பாக இந்த சீசனில் நடிகைகள் பூனம் பாஜ்வா, கிரண், பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரை ஆஹா ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த சீசன் வரும் 12ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications