Star movie: கவினின் ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ்.. டேட்டை லாக் செய்த படக்குழு!
சென்னை: நடிகர் கவின் -இயக்குனர் இளன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஸ்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள சூழலில் படம் முதல் மூன்று நாட்களிலேயே 15 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 கோடி ரூபாய்களை நோக்கி இந்த படத்தின் வசூல், பயணம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மொத்த வசூல் 20 கோடியாக இருந்த சூழலில் தற்போது கவினின் ஸ்டார் படம் சில தினங்களில் அந்த வசூல் எண்ணிக்கையை ரீச் செய்துள்ளது போலிஉட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த தன்னுடைய கதை தேர்வுகளால் கவனத்தைப் பெற்று வருகிறார் கவின்.

நடிகர் கவின்: நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் ஸ்டார் படம் வெளியாகியுள்ளது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கி கவனத்தை பெற்ற இயக்குனர் இளன் டைரக்ஷனில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அதித்தி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சினிமாவில் நடிகனாக சாதிக்க துடிக்கும் கலை என்ற கேரக்டரில் இந்த படத்தில் கவின் நடித்துள்ளார்.
ஸ்டார் படம்: முன்னதாக இதே கதைகளத்தில் படங்கள் வந்துள்ள போதிலும் இந்தப் படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக உருவாகியிருக்கிறது. படத்தின் வசூல் முதல் மூன்று நாட்களில் 15 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் தற்போது 20 கோடிகளை நோக்கி பயணப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற சூழலில், படத்தின் ஒட்டுமொத்த வசூல் 20 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஸ்டார் படத்தின் வசூல் சில தினங்களிலேயே 20 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலத்தை கொடுத்த யுவன் இசை: இந்தப் படத்தில் சிறிய கேரக்டர்களுக்கும் நிறைவான காட்சிகளை கொடுத்து படத்தை சிறப்பாக்கி உள்ளார் இயக்குனர் இளன். படத்தின் இரண்டாவது பாகத்தின் சில இழுவை காட்சிகளை தவிர்த்திருந்தால் இந்த படம் இன்னும் அதிகமான கவனத்தை ரசிகர்களிடையே பெற்றிருக்கும் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் மூலம் கவனத்தை பெற தவறியுள்ள யுவன், பிஜிஎம் மூலம் இந்த படத்தை சிறப்பாக்கி உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ்: படத்தின் ஓடிடியை பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாகவும் படம் ரிலீசாகி நான்கு வாரங்கள் கழித்து அதாவது வரும் ஜூன் மாதம் 14ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டுள்ள சூழலில் அதிக அளவில் ஸ்டார் படம் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











