Stree 2 Review: 873 கோடி வசூல்.. ஸ்ட்ரீ 2 படத்தில் அப்படி என்னதான் இருக்கு?.. ஓடிடி விமர்சனம் இதோ!

சென்னை: இந்தியளவில் இந்த ஆண்டு பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் அரண்மனை 4 அசுர வேட்டை நடத்திய நிலையில், டிமான்ட்டி காலனி 2, பிளாக் என வரிசையாக ஹாரர் படங்கள் ஹிட் அடித்துள்ளன. மலையாளத்தில் இந்த ஆண்டு அதை ஆரம்பித்து வைத்ததே மம்மூட்டியின் பிரமயுகம் படம் தான்.

தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்களை சிரிக்கவும், பயமுறுத்தவும் செய்யும் பேய் படங்களை இருட்டு அறையில் அனைவருடன் அமர்ந்து பார்ப்பதே ஆனந்தம் தான். பாலிவுட்டுக்கும் இந்த ஆண்டு பேய் படங்கள் பெரிதாக கை கொடுத்துள்ளன.

stree 2 review 2

ஜோதிகா, மாதவன், அஜய் தேவ்கன் நடித்த ஷைத்தான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அடுத்து வெளியான மூஞ்சியா திரைப்படமும் நல்ல லாபம் தான். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ஸ்ட்ரீ 2 படம் 61 நாட்களை கடந்து இன்னமும் பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த படத்தின் ஓடிடி விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

ஸ்ட்ரீ 2 கதை: சார்கட்டே எனும் ராட்சசனை ஸ்ட்ரீ ஏற்கனவே அழித்து அந்த ஊரின் காவல் தெய்வமாக இருக்கிறாள். மீண்டும் அந்த ராட்சசன் உயிர்த்தெழுத்து தலை தனியாகவும் முண்டம் தனியாகவும் நடந்து வந்து ஊரில் இருக்கும் மாடர்ன் பெண்களை கடத்திச் செல்கிறான். அதை தடுக்க ஸ்ட்ரியின் மகளாக மாயாஜாலம் தெரிந்த பெண்ணாக ஸ்ரத்தா கபூர் வருகிறார். ராஜ் குமார் ராவ் தனது நண்பனின் காதலியை அந்த சார்கட்டே தூக்கிச் செல்ல துரத்தும் போது தனக்கு மட்டும் காதலியாக தெரியும் ஸ்ரத்தா கபூர் ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பேய்க்கு எதிராக போராட சொல்கிறார். இறுதியில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஸ்ரத்தா கபூர் இணைந்து அந்த 8 அடி உயர ராட்சசனை வதம் செய்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

stree 2 review 2

எக்கச்சக்க கேமியோக்கள்: அமர் கெளசிக் இயக்கத்தில் ஸ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி நடித்த ஸ்ட்ரீ 2 படத்தில் கேமியோ ரோலில் அக்‌ஷய் குமார், வருண் தவான் மற்றும் தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளனர். கேமியோவாக வருபவர்கள் வெறுமனே வந்து செல்லாமல், அவர்களுக்கு கதையில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தான் படத்தின் ஹைலைட். டான்ஸ் ஆட வரும் தமன்னாவை அந்த ராட்சசன் தூக்கிச் சென்று மொட்டை அடித்து நிற்க வைத்த காட்சிகள் எல்லாம் வேறலெவல். ஓநாய் மனிதனாக வருண் தவானும், அந்த ராட்சசனின் வம்சாவளி நபராக மனநல மருத்துவமனையில் தாஜ்மகால் கட்டிய ஷாஜகானே நான் தான் என காமெடியில் அதகளம் செய்யும் அக்‌ஷய் குமார் என அனைத்து கேமியோக்களும் சிறப்பான சம்பவம்.

காமெடி தான் ஹைலைட்: ராஜ்குமார் ராவ் அதிகமாக ராகவா லாரன்ஸ் காஞ்சனா வரிசை படங்களை பார்த்திருப்பார் போல தெரிகிறது. அவரும் அவரது நண்பர்கள் குழுவும் பங்கஜ் திரிபாதியுடன் சேர்ந்துக் கொண்டு அடிக்கும் காமெடி லூட்டிகள் தான் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து 873 கோடி வசூலை ஈட்டித் தந்திருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே கல்கி 2898 ஏடி படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்துள்ள இந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் இந்தியில் மட்டுமே வெளியாகி இப்படியொரு சாதனையை படைத்துள்ளது. பான் இந்தியா படமாக அனைத்து மொழிகளிலும் வெளியாகி இ ருந்தால் 1000 கோடி வசூல் கேக் வாக் என்கின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 120 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

stree 2 review 2

படம் எப்படி இருக்கு?: காமெடியை தவிர்த்து விட்டுப்பார்த்தால் ஆரம்பத்தில் பெண்களை கடத்தும் அந்த வெறும் தலையின் காட்சிகள் அட்டகாசமாக உள்ளன. ஆனால், அந்த ராட்சசனை ராஜ்குமாரும் அவரது நண்பர்களும் காமெடி பீஸாக ஹேண்டில் செய்த விதம் பெரிதாக ஈர்க்கவில்லை. தும்பாட் அளவுக்கு எல்லாம் பயத்தை இந்த படம் தரவில்லை. ஜாலியாக ஒரு பேய் படத்தை பார்த்து ஓடிடியில் குழந்தைகளுடன் ரசிக்கலாம். மொழி பிரச்சனை பெரிதாக இருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X