Archies Review: யப்பா சாமி முடியல.. அமிதாப் பேரன்.. ஷாருக்கான் மகளுக்கு எல்லாம் நடிப்பே வரலையே!
மும்பை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நெப்போடிசத்தின் பீக்காக உருவாகி உள்ள ஆர்ச்சீஸ் படத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். 1960களில் நடக்கும் கதையாக இந்த மியூசிக் காமெடி படம் உருவாகி இருக்கிறது.
ஓல்ட் இஸ் கோல்ட் என்கிற கான்செப்ட்டில் இயக்குநர் ஜோயா அக்தர் இந்த படத்தை உருவாக்கி உள்ளார். இதில், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா, ஷாருக்கானின் மகள் சுஹானா கான், போனி கபூரின் இளைய மகள் குஷி கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாரிசுகள் நடித்துள்ளனர்.

ஆனால், ஒருத்தருக்கும் ஒழுங்கா நடிக்கவே வரலை என்கிற கடுமையான விமர்சனங்களும் 10 நிமிஷத்துக்கு மேல இந்த படத்தை பார்க்க முடியவில்லை போன்ற விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. ரசிகர்களின் விமர்சனங்களின் தொகுப்பை இங்கே காணலாம்..
நடிப்பு செத்தே போச்சு: ஆர்ச்சீஸ் படத்தின் ஒரு காட்சியை பதிவிட்டு நடிப்பு இங்கே மொத்தமும் செத்தே போச்சு என இந்த நெட்டிசன் படுமோசமாக கலாய்த்துள்ளார். ஆர்ச்சீஸ் படத்தின் ப்ரீமியர் ஷோவில் ஷாருக்கான், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று பெரியளவில் புரமோஷன் செய்தனர். ஆனால், ரசிகர்கள் இந்த வெப்சீரிஸை வெளுத்து வாங்கி வருகின்றனர்.
க்ரிஞ்ச் நடிப்பு: சுஹானா கான் மற்றும் குஷி கபூரின் நடிப்பு பார்க்கவே சகிக்கவில்லை என்றும் ரொம்பவே க்ரிஞ்சாக உள்ளது இந்த ஆர்ச்சீஸ் படம் என இந்த நெட்டிசன் விளாசி உள்ளார்.
ஷாருக்கான் பொண்ணுக்கு எதுவும் வரல: 15 நிமிஷம் பார்த்தேன்.. ஷாருக்கான் மகள் சுஹானா கானுக்கு நடிக்கத்தான் வரலையான்னு பார்த்தால், நடனம் ஆடவோ, பாடலுக்கு ஏற்ப வாய் அசைக்கவோ எதுவுமே வரவில்லை என்றும் ஷாருக்கான் ரசிகர்கள் மட்டுமே ப்ரோமோஷனுக்காக இந்த படத்தை பாராட்டுவார்கள் அய்யோ சாமி முடியல என இந்த ரசிகர் கும்பிடு போட்டுள்ளார்.
சுஹானா கான் சொதப்பல்: ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ள நிலையில், ஷாருக்கான் பெயரையே கெடுத்து விட்டார் என பலரும் சுஹானா கானின் நடிப்பையே டார்கெட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். புதிய நடிகர்களின் முயற்சி சிறப்பாகவே உள்ளது என்றும் தயாரிப்பு அதிக செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒருமுறை பார்க்கலாம் என்றும் ஆதரவு விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











