கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது.. பற்ற வைத்த உர்ஃபி ஜாவேத்.. சன்னி லியோன் அட்வைஸ்!

மும்பை: எம் டிவி மற்றும் ஜியோ டிவியில் தமிழிலும் தற்போது சன்னி லியோன் தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ் வில்லா எக்ஸ் க்யூஸ் மீ சீசன் 15 ஒளிபரப்பாகி வருகிறது. வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த டேட்டிங் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஏகப்பட்ட இளைஞர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதயங்களின் ராணி என்றழைக்கப்படும் சன்னி லியோன் மற்றும் இதய ராஜா என்ற அழைக்கப்படும் தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் கார சார மசாலாவை சேர்க்க மிஸ்சீஃப் மேக்கராக உர்ஃபி ஜாவேத் போட்டியாளர்களுக்கு அடிக்கடி சவாலான போட்டிகளை கொடுத்து காதலர்களுக்கு இடையே கலாட்டாவை ஏற்படுத்தி நிகழ்ச்சியை சூடு பறக்க செய்து வருகிறார்.

ott television sunny leone urfi javed splitsvilla x5

இந்த வாரம் டீயை குடி கிசுகிசு பேசு என்கிற போட்டியை உர்ஃபி ஜாவேத் ஆரம்பித்து வைக்க, காஷீஷ் மற்றும் டீகிலா பற்றி சக பெண் போட்டியாளர்களே இஷ்டத்துக்கு கிசுகிசு பேசத் தொடங்கி விட்டனர். 'Chai Pe Charcha' எனும் அந்த போட்டியை உர்ஃபி ஜாவேத் ஸ்ப்ளிட்ஸ் வில்லா போட்டியாளர்கள் மத்தியில் தொடங்கி வைக்க வில்லாவே இரண்டாகி விட்டது.

ott television sunny leone urfi javed splitsvilla x5

கிசு கிசு டாஸ்க்: ஒரு கட்டத்தில் கிசுகிசுக்கள் பெர்சனல் அட்டாக்காகவும் பெண் போட்டியாளர்களின் மாண்பையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் சென்றதும் அதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் உடனே உள்ளே புகுந்து இப்படி பெண்களே பெண்களை பற்றி தேவையில்லாத காசிப்களை பேசி அசிங்கப்படுத்தக் கூடாது என்றும் ஒருவரை முயற்சி செய்து மேலே கொண்டு வரத்தான் பார்க்க வேண்டும். பெண்களே பெண்களை கீழே பிடித்து தள்ளும் வேலையை செய்யக் கூடாது என்றும் இந்த உலகத்தையே பெண்கள் தான் பல தொழில்களில் பல துறைகளில் ஆட்சி செய்து வருகிறோம். ஆனால், பெண்ணுக்கு எதிரி பல இடங்களில் பெண்களாகவே இருப்பது தான் மிகவும் மோசமான விஷயம் என அறிவுரை வழங்கினார்.

ott television sunny leone urfi javed splitsvilla x5

கீழே தள்ளக் கூடாது: சன்னி லியோன் கொடுத்த அட்வைஸ் போட்டியாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால், உர்ஃபி ஜாவேத் கொளுத்திப் போட்ட கிசுகிசு டாஸ்க் காரணமாக டீகிலா உச்சகட்ட கோபத்துக்கு ஆளாகி விட்டார். மேலும், காஷிஷ் தன்னை பற்றி மோசமான வதந்திகளை பரப்பியது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார். இன்னொரு பக்கம் ஆரக்கிள் ஹர்ஷ் மற்றும் நயேராவை ஐடியல் மேட்ச் இல்லை என சொல்லி விட அவர்களும் அப்செட் ஆகி விட்டனர்.

ott television sunny leone urfi javed splitsvilla x5

இந்த வார எபிசோடு ரொம்பவே சூடு பிடிக்க காரணம் அந்த டீ டாஸ்க் தான். ஆரம்பத்தில் சாதாரண டீ தானே என நினைத்த போட்டியாளர்களுக்கு கடைசியில் பெரிய பல்பு காத்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X