கட்டுப்படுத்த முடியாத வன்முறை.. அதிக கசமுசா காட்சிகள்.. ஓடிடி தளத்துக்கு செக் வைத்த நீதிமன்றம்

சென்னை: புதிதாக வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் காண மக்களின் ஆர்வம் தற்போது குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ஓடிடி தளங்கள் தான் என குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் வெப் தொடர்களால் சமூகத்தில் சீர்கேடுகள் ஏற்படுவதாகவும்,இதனால் குற்றங்கள் அதிகரிப்பதாகவும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஓடிடி தளத்தை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி ஹிட் ஆன படங்கள் தொலைக்காட்சிக்கு வர குறைந்தது 6 மாதங்கள் அல்லது 1 வருடங்கள் ஆகும். குறிப்பாக ரஜினி, கமல், விஜய் அஜித் நடிகர்களின் படங்களை தியேட்டரில் காண முடியாமல் போன ரசிகர்கள் ஏங்கி தவித்த காலங்களும் இருக்கின்றன. பொங்கள், தீபாவளி பண்டிகை காலங்களில் மட்டுமே விஜய், அஜித் நடிகர்களின் புதிய படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வார்கள். ஆனால், தற்போது எந்த ஸ்டார் நடிகர்கள் படங்களாக இருந்தாலும் திரையரங்கில் வெளியான 1 மாதத்திதிலேயே ஓடிடி தளங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக உலக சினிமாக்கள் கைக்குள் அடங்கிவிட்டன.

supreme-court-notice-to-ott-platforms

நல்ல கதைகள்: இன்றைய சூழலில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஒன்றுக்கு பத்து ஓடிடி தளங்களில் அனைத்து மொழி சார்ந்த படங்கள் மற்றும் புதிய புதிய வெப் தொடர்களையும் மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். ஹாலிவுட் தரத்தில உருவாகும் படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு அதிக கவனத்தை பெறுகிறது. தியேட்டரில் வந்து கவனம் பெறாத சில நல்ல படங்கள் கூட ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து நல்ல விமர்சனத்தையும் பெறுகிறது. இதில், பிறமொழி வெப் தொடர்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகின்றன. குறிப்பாக மணி ஹெய்ஸ்ட், ஸ்குயிட் கேம் போன்ற வெப் தொடர்களும் இந்திய மக்களின் கவனத்தை பெற்று வெற்றியடைந்திருக்கிறது.

ஆபாச காட்சிகள்: ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு சென்சார் கட்டுப்பாடு இல்லாதது ஒரு குறையாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. இதனால் அதிக வன்முறை காட்சிகளும் ஆபாச காட்சிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஓடிடி தளங்களால் சமூக சீரழிவு ஏற்படுவதாகவும் ஒரு சில ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கட்டுப்பாடு இல்லாத ஓடிடி தளங்களை முடக்கவும், சமூக வலைதளங்களில் வெளியாகு ஆபாச வீடியோக்கள் மற்றும் காட்சிகளை தடை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர். அண்மையில் இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் ஆர்டர்: ஓடிடி தளங்களில் வெளியாகும் படுக்கை அறை மற்றும் பெண்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமேசான், நெட்பிளிக்ஸ் உல்லு, முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப், எஎல்டி, எக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி இந்த விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. மேலும், ஒரு இயக்குநரின் சுதந்திரத்தை பறிக்கும் செயலாக பார்ப்பதாகவும், நடந்த உண்மை சம்பவங்களை சொல்ல வாய்ப்பு கிடைத்தால் அதை அப்படியே காட்சிப்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது. பெண்களை தவறாக சித்தரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என சினிமா அனுபவம் உள்ள இயக்குநர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X