ஆபாச வெப்சீரிஸ்களால் இளைஞர்கள் மனசை கெடுக்குறீங்க.. ஏக்தா கபூரை கண்டித்த உச்சநீதிமன்றம்!

மும்பை: Alt Balaji எனும் ஓடிடி தளத்தை நடத்தி அடல்ட் வெப்சீரிஸ்களை வரிசையாக வெளியிட்டு ஓடிடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.

ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான XXX வெ[சீரிஸ் தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பித்த வழக்கின் போது ஏக்தா கபூரை கண்டித்து நீதிபதிகள் சொன்ன கருத்துக்கள் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஓடிடிக்கு எந்தவொரு சென்சாரும் இல்லாத நிலையில், எரோடிக்கா என்கிற பெயரில் மேலாடை இல்லாமல், ஏகப்பட்ட படுக்கையறை காட்சிகளுடன் வெப்சீரிஸ்கள் வந்து விழ்ந்து வருகின்றன.

ஆபாச வெப்சீரிஸ்

ஆபாச வெப்சீரிஸ்

ஹாலிவுட் வெப்சீரிஸ்கள் முழு நிர்வாணக் காட்சிகளையே நம்முடைய குழந்தைகளின் மொபைலுக்குள் கொண்டு வந்து விட்ட நிலையில், பாலிவுட்டில் பல ஆபாச வெப்சீரிஸ்கள் தைரியமாக உருவாக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன. பிரபல நடிகர்களும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், அரை நிர்வாணமாகவும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருகின்றனர். இதன் மூலம் நாடு முழுவதும் ஏகப்பட்ட பாலியல் தொல்லைகளும், ஒரு தலை காதல் கொலைகளும் அரங்கேறி வருகின்றன.

ஏக்தா கபூர் மீது வழக்கு

ஏக்தா கபூர் மீது வழக்கு

ராணுவ அதிகாரிகளின் மனைவிகள் மற்ற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வது போல ஏக்தா கபூர் தயாரித்து வெளியிட்ட XXX வெ[சீரிஸ் பெரும் பரபரப்பை கிளப்பியது. 2020ல் வெளியான அந்த வெப்சீரிஸ் மீது முன்னாள் ராணுவ அதிகாரி சாம்பு குமார் என்பவர் தொடுத்த வழக்கில் ஆஜராகாமல் தட்டிக் கழித்து வரும் ஏக்தா கபூரை கைது செய்ய உத்தரவு விட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற மேல் முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் ஏக்தா கபூரை கண்டித்தது பரபரப்பை கிளப்பி உள்ளது.

இளைஞர்களை கெடுக்குறீங்க

இளைஞர்களை கெடுக்குறீங்க

ஏக்தா கபூரின் வழக்கறிஞர் இந்த வழக்கில் தனது கட்சிக்காரர் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் நடத்தி வருவது சப்ஸ்கிரிப்ஷன் செய்யும் ஒரு அப்ளிகேஷன், விருப்பமுள்ளவர்கள் மட்டுமே பார்க்கின்றனர் என வாதிட, கடுப்பான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சிடி ரவிக்குமார் இளைஞர்களின் மனசை கெடுக்குறீங்க என விளாசி தள்ளினர்.

தீயவற்றை விதைக்கிறீங்க

தீயவற்றை விதைக்கிறீங்க

நம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல், காசு சம்பாதிக்கும் நோக்கில் நடிகர்கள், நடிகைகளை வைத்து எல்லை மீறிய ஆபாச காட்சிகளை படமாக எடுத்து வெப்சீரிஸ் என்கிற பெயரில் வெளியிடுறீங்க, தீயவற்றை விதைக்கிறீங்க, இதை உங்கள் கட்சிக்காரர் ஏக்தா கபூரிடம் போய் அவர் புத்திக்கு உரைக்கும் படி சொல்லுங்கள் என கண்டித்து அனுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X