என்ன எலிமினேட் ஆகாம வாக்கவுட் ஆகுறாங்க.. சிம்பு வந்த ராசியா? இப்போ வெளியேறியது யார் தெரியுமா?

சென்னை: வனிதா விஜயகுமாரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியும் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வாக்கவுட் ஆகி உள்ளார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் வாக்கவுட் செய்ததில் இருந்தே இந்த சீசனில் சீனியர் போட்டியாளர்கள் வாக்கவுட் செய்து வருகின்றனர்.

சிம்புவின் ஆளுமைக்கு கீழ் இயங்க மனமில்லாதது தான் காரணமா? என்கிற கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.

எத்தனை சான்ஸ்

எத்தனை சான்ஸ்

பிக் பாஸ் சீசன் 4ல் இருந்து திடீரென எவிக்ட் செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி முக்கியமான காரணத்திற்காக வெளியேறுகிறேன் என சொல்லி இருந்தார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அசத்தல் என்ட்ரி கொடுத்த அவர் ஆரம்பத்திலேயே எவிக்ட் ஆன நிலையில், மீண்டும் வேறு ஆள் கிடைக்காத நிலையில், சுரேஷ் தாத்தாவையே ரீ என்ட்ரி கொடுக்க வைத்திருந்தனர்.

வயசானாலும்

வயசானாலும்

தாத்தா என அனைத்து போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் சுரேஷ் சக்கரவர்த்தி வயசானாலும் மற்ற சீனியர் போட்டியாளர்களை போல சும்மா இருக்க மாட்டார். எதையாவது கொளுத்திப் போட்டுக் கொண்டும் டஃப் ஆன டாஸ்க்கிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு விளையாடி வந்தார்.

வாக்கவுட்

வாக்கவுட்

சமீபத்தில் நடந்த கார் டாஸ்க்கில் கடைசி வரை கடுமையாக போராடிய சுரேஷ் சக்கரவர்த்திக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், அவர் தற்போது நிகழ்ச்சியை விட்டு வாக்கவுட் செய்துள்ளார். வனிதா விஜயகுமாரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியும் எவிக்ட் ஆகாமல் வாக்கவுட் செய்யப்பட்டு இருப்பதற்கு பின்னணியில் ஏதாவது கேம் இருக்கிறதா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அதுதான் பிரச்சனையா

அதுதான் பிரச்சனையா

உடல்நலம் சரியில்லை என்றால் மீண்டும் பிக் பாஸ் பக்கமே சுரேஷ் தாத்தா தலை வைத்து படுத்திருக்க மாட்டாரே, ஏன் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு எவிக்ட் ஆன நிலையில், மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் என அல்டிமேட் ரசிகர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

சிம்பு தான் காரணமா

சிம்பு தான் காரணமா

கமல்ஹாசன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், வனிதா விஜயகுமார் புதிய ஹோஸ்ட்டாக யார் வரப் போகிறார் என்பதை அறிந்த பின்னரே வெளியேறினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல தற்போது சுரேஷ் தாத்தாவும் வெளியேறி உள்ள நிலையில், சின்ன வயது ஹோஸ்ட்டுக்கு கீழ் போட்டியாளராக இருக்க விரும்பாதது காரணமா? அல்லது சிம்பு எவிக்ட் செய்து வெளியேறாமல் தாங்களே இப்படி வாக்கவுட் செய்வது சிறப்பு என பிக் பாஸ் டீமிடம் பேசிவிட்டு கிளம்புகிறார்களா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

சீக்கிரம் தெரிந்துவிடும்

சீக்கிரம் தெரிந்துவிடும்

சுரேஷ் தாத்தா வெளியே போனதும் செம ஆக்டிவாக அடுத்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே இதன் உண்மை நிலவரம் என்னவென்பது தெரிந்து விடும் என சுரேஷ் தாத்தா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சுரேஷ் சக்கரவர்த்தி வாக்கவுட் செய்த நிலையில், இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்குமா? அல்லது யார் வெளியேறுவார் என கேள்விகள் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X