கருப்பு தான் கவலை.. சூர்யா 46 படத்துக்கு அந்த சிக்கலே இல்லை.. இத்தனை கோடிக்கு விற்ற ஓடிடி உரிமம்?
சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா. மமிதா பைஜு நடித்து வரும் 'சூர்யா 46' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யா தொடர்ந்து பல படங்களில் கவனம் செலுத்தி இயக்குநர்களையும் தேர்வு செய்து நடித்து எப்படியாவது தனது ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பாகுபலி படத்தை போல கொண்டாடப்படும் என நம்பி உழைத்த சூர்யாவுக்கு அந்த படம் ரசிகர்கள் மத்தியில் க்ளிக்காகாத நிலையில், பெரிய நஷ்டத்தை படக்குழு சந்தித்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரொம்பவே ஆர்வத்துடன் நடித்த ரெட்ரோ திரைப்படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை அள்ளவில்லை என்றாலும் நான் தியேட்டரிக்கல் லாபத்துடன் வெற்றிப்படமாகவே மாறியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
கருப்பு டிஜிட்டல் ரைட்ஸ்: இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படம் வெளியாகும் என எதிர்பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கூட அந்த படம் வெளியாகுமா என்பது தெரியவில்லை என்கிற வருத்தத்துடன் சோஷியல் மீடியாவில் திடீரென சூர்யாவுக்கு எதிராகவே சில ரசிகர்கள் மோசமான கருத்துக்களையும் ட்ரோல்களையும் குவிக்க ஆரம்பித்து விட்டனர். கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை இன்னும் எந்தவொரு ஓடிடி நிறுவனமும் வாங்க முன் வராதது தான் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இறுதி செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெட்பிளிக்ஸ் வாங்கிடுச்சு: ஆனால், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 46 படத்துக்கு அந்த சிக்கலே இல்லை என்றும் லக்கி பாஸ்கர் படத்தின் தரமான வெற்றியே சூர்யா 46 படத்தின் டிஜிட்டல் உரிமையை மறுபேச்சு சொல்லாமல் படம் ரெடியாவதற்கு முன்பாகவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தனை கோடிக்கு வியாபாரம்: அதிகபட்சமாக 85 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் சூர்யா 46 படத்தின் டீலை முடித்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. போகிற போக்கை பார்த்தால் சூர்யா அசுர வேகத்தில் சூர்யா 46 படத்தை முடித்துவிட்டு அந்த படத்தை ரிலீஸுக்கு கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











