கருப்பு பட ஓடிடி ரிலீஸ் எப்போது?.. தியேட்டரில் அருள் வந்து ஆடியது போல் வீட்டிலும் ஆடுவார்களா?
சென்னை: சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் திரைப்படம் கருப்பு. திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். பெரிய ஹைப்போடு வெளியான அந்தப் படம் தியேட்டரில் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. இதுவரை 150 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்பு திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வட்டமடிக்க தொடங்கியிருக்கின்றன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ ஆகிய இரண்டு படங்களுமே மோசமான தோல்வியை சந்தித்தன. அதிலும் கங்குவா படத்துக்கு ஏற்றப்பட்ட ஹைப்பும்; அதன் பலனாக சந்தித்த ரிசல்ட்டையும் பார்க்கையில் யாருமே இனிமேல் அப்படி ப்ரோமோஷன் செய்யமாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வரிசையாக இரண்டு திரைப்படங்கள் தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்ததால் சூர்யா ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டில் இருந்தார்கள்.

பாலாஜியுடன் கருப்பு: இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார் சூர்யா. அதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தார் ஆனால் அவர் விலகிவிட்ட சென்சேஷனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் உள்ளே வந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 14ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் சில காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தால் மே 15ஆம் தேதி ரிலீஸானது.
புத்துணர்ச்சி தந்த கருப்பு: இந்தப் படமாவது பெரிய வெற்றியை பெற்று தங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என சூர்யாவின் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தார்கள். அவர்களது நம்பிக்கையை பாலாஜி வீணாக்கவில்லை என்றே தெரிகிறது. நாட்டார் தெய்வ கதைக்களத்தை எடுத்துக்கொண்டு; மாஸ் ஹீரோவுக்கு தேவையான அத்தனை விஷயங்களை வைத்தும் தரமாக படத்தை கொடுத்திருந்தார். இதன் காரணமாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறி கருப்பு மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது.
வசூல் எவ்வளவு?: படம் வெளியான முதல் நாளிலேயே எக்கச்சக்க வசூலை அள்ளியது. போகப்போக படம் பற்றி பாசிட்டிவ் விமர்சனங்கள் எக்குத்தப்பாக வந்ததால் அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் எகிறியது. இதுவரை 150 கோடி ரூபாய் வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக 200 கோடி ரூபாயை அள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்கள் கழித்து சூர்யாவின் படம் நூறு கோடி ரூபாய் வசூலை கடந்து சென்றுகொண்டிருப்பதால் அவரது ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை.
ஓடிடி ரிலீஸ் எப்போது?: இந்நிலையில் கருப்பு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமானது ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவிருப்பதாக தெரிகிறது. தியேட்டரில் ஏற்கனவே ரெஸ்பான்ஸ் சூப்பராக இருக்கிறது. அதே ரெஸ்பான்ஸ் ஓடிடி ரிலீஸின்போதும் கிடைக்குமா தியேட்டரில் படம் பார்க்கையில் அருள் வந்து ரசிகர்கள் ஆடியது போன்று வீட்டிலும் ஆடுவார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆகமொத்தம் கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத பேரனுபவமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.


Click it and Unblock the Notifications
