Nadu Center Webseries: விஜய் சேதுபதி மகன், சசிகுமார்.. ஸ்கூலுக்கே வந்த போதைக் கலாச்சாரம்.. தப்பிக்க ஒரே வழி!

சென்னை: கூடைப்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட தமிழ் வெப் சீரிஸான "நடு சென்டர்" தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சூர்யா எஸ்.கே., சூர்யா விஜய் சேதுபதி, சாரா பிளாக், டெர்ரென்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா அமலா ஜோசப், மற்றும் சிவம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆஷா சரத், கலையரசன், சசிகுமார், ரெஜினா கசாண்ட்ரா என நட்சத்திரங்களும் இந்தத் தொடருக்கு வலு சேர்த்துள்ளனர்.

Suriya Sethupathi Sasi Kumar starrer Nadu Center Web Series out on Jio Hotstar
Photo Credit:

தற்போது மூன்று எபிசோட்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மீதமுள்ள எபிசோட்களை தயாரிப்பாளர்கள் வாராந்திர அடிப்படையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ் வெப் சீரிஸ் வரிசையில் "நடு சென்டர்" ஒரு புதிய வரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி மகன்: நரு நாராயணன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் சூர்யா எஸ்.கே. என இரு இளம் நடிகர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ள இந்த நடு சென்டர் வெப்சீரிஸ் மொத்தம் 17 எபிசோட்கள் கொண்டதாக உருவாகியுள்ளது. முதல் மூன்று எபிசோட்கள் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன. வார வாரம் ஒரு எபிசோடு ஹார்ட் பீட் எபிசோடு போல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீனிக்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்த சூர்யா சேதுபதி இந்த வெப்சீரிஸில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். வாலிபால் கோச்சாக சசிகுமார் நடித்துள்ளார்.

பள்ளியில் போதைப் பொருள் கலாச்சாரம்: 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் பெருகி வரும் உண்மையை இந்த வெப்சீரிஸ் தோலுரித்துக் காட்டுகிறது. "நடு சென்டர்" ஒரு டீன் ஏஜ் கதையாக உருவாகியுள்ளது. கனா காணும் காலங்கள் சீரியல் பள்ளி மாணவர்களை பற்றிய கதையாக உருவாகி ஹிட் அடித்த நிலையில், போதைப் பொருட்கள் எப்படி இளைஞர்களை சீரழிக்கிறது, அதிலிருந்து அவர்களை ஸ்போர்ட்ஸ் எப்படி மீட்டெடுக்கிறது என்கிற கதையை இயக்குநர் ராவாக உருவாக்கியுள்ளார்.

நடுசென்டர் கதை: 17 வயது கூடைப்பந்து வீரரான பி.கே.யின் உத்வேகமான கதையை இது சொல்கிறது. ஒழுங்கற்ற கலாசாரத்திற்கும், வன்முறைக்கும் பெயர் போன ஒரு பள்ளியில் சேரும் பி.கே., அடாவடியாக திரியும் மாணவர்களை விளையாட்டின் மூலம் எப்படி மாற்ற முயற்சிக்கிறார் என்பதும் சசிகுமாரின் பங்கு என்ன என்பதுமே இந்த வெப்சீரிஸின் கதையாக உள்ளது.

படக்குழு: "நடு சென்டர்" வெப்சீரிஸை நரு நாராயணன் இயக்கி எழுதியுள்ளார். கெர்த்தி மற்றும் நிர்மல் ஆகியோரும் திரைக்கதை உருவாக்கத்தில் பங்களித்துள்ளனர். ஹெஸ்டின் ஒளிப்பதிவாளராகவும், விஷால் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். வெங்கட் படத்தொகுப்பாளராக செயல்பட்டுள்ளார். சமீபத்தில், "நடு சென்டர்" படக்குழுவினர் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்குச் சென்று தொடரை விளம்பரப்படுத்தினர்.

இந்த வார ரிலீஸ்: அங்கு பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்களுடன் வேடிக்கையான கூடைப்பந்து விளையாட்டிலும் ஈடுபட்டனர். இந்த வாரம் தமிழ் சினிமாவில் கவின் நடித்துள்ள மாஸ்க், அர்ஜுன் நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட புதிய படங்களும் விஜய், சூர்யா, வடிவேலு நடித்த ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் திரைப்படமும் வெளியாகும் சூழலில் ஓடிடி ரசிகர்களை குறிவைத்து நடு சென்டர், பைசன், டீசல் உள்ளிட்டவை வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X