Kanguva OTT: தியேட்டரில் வாஷ் அவுட் ஆன கங்குவா..ஓடிடியில் ரிலீஸ்.. எப்போ தெரியுமா?

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 14ந் தேதி கங்குவா திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கார்த்தி, கருணாஸ், கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக பெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உழைத்து இருக்கிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்திய திரைப்படமாக 10 மொழிகளில் தியேட்டரில் வெளியானது. படம் வெளியான நாளில் படம் குறித்து மிகவும் மோசமான விமர்சனங்கள் எழுந்தன.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. படத்தினை சிறுத்தை சிவா இயக்கினார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார்.

kanguva suriya ott

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்: கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா திரைப்படம் நிச்சயமாக 2000 கோடியை வசூல் செய்யும் என பேசி இருந்தார். அதுமட்டுமல்லாமல் படத்தின் இயக்குனர், படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சூர்யாவின் கடுமையான உழைப்பை வெகுவாக புகழ்ந்து பேசி இருந்தனர். இதனால், கங்குவா திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளிலேயே கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. படத்தின் முதல் அரை மணி நேரம் செம மொக்கை என பலர் இணையத்தில் கழுவி ஊற்றினர். இதில், முதல் அரைமணி நேரம் செம மொக்கை என பலர் கழுவி ஊற்றியதால், 12 நிமிடக் காட்சியை படக்குழு கத்தரித்தது.

ஓடிடி ரிலீஸ் தேதி: கங்குவா திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், படம் இந்தியா முழுவதும் ரூபாய் 66.10 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2000 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம், 100 கோடியை கூட தாண்ட முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதில், கங்குவா திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் தவிர்த்து மற்ற மொழிகளில் இப்படம் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்தி வெர்ஷன் ஜனவரியில் ரிலீஸ் ஆகும். இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூபாய் 100 கோடிக்கு வாங்கி உள்ளதால், அப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X