தீபாவளிக்கு ‘கருப்பு’ படம் வராதா?.. கதறவிட்ட கங்குவா, ரெட்ரோ.. சூர்யா படத்துக்கு இப்படியொரு சிக்கலா?

சென்னை: புதிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களிலேயே ரிலீஸ் தேதியை அறிவித்து வரும் நிலையில், சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியான கருப்பு படத்தின் டீசரில் ரிலீஸ் தேதியை காணவில்லையே என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சூர்யா படத்துக்காக கார்த்தி தனது சர்தார் 2 படத்தையே அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ள நிலையில், கருப்பு ரிலீஸ் தேதியை குறிப்பிடாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு காரணமே சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ படங்கள் ஓடிடியில் கூட பெரிதாக ஓடாமல் போனது தான் என்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, கார்த்தி நடிப்பில் வெளியான கங்குவா படம் வசூல் ரீதியாகவும் ஓடிடியிலும் பெரும் சரிவை சந்தித்தது.

Suriya s Karuppu movie digital rights not yet sold is the main reason for release date not fixed

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நம்பி பெரிய தொகைக்கு வாங்கிய நிலையில், அந்த படத்தை விட நானியின் ஹிட் 3 படம் தான் ஓடிடியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்ததாக கூறுகின்றனர். கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படம் தீபாவளிக்கு வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியான கருப்பு டீசரில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. அதனால், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகுமா? ஆகாதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டிஜிட்டல் விற்பனை ஆகலையாம்: கருப்பு படத்தின் டிஜிட்டல் இன்னமும் விற்பனையாகாமல் இருப்பதால் தான் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கங்குவா மற்றும் ரெட்ரோ படங்கள் பார்த்த வேலை தான் காரணம் என்கின்றனர்.

அதிக தொகை கேட்குறாங்க: சூர்யாவின் கருப்பு படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்றும் முந்தைய படங்கள் போல சொதப்பாது என தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ள நிலையில், கருப்பு படத்தை பெரிய தொகைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதால் தான் இழுபறி நிலவுகிறது என்கின்றனர். எதுவாக இருந்தாலும், டீசர் வெளியாகி உள்ள நிலையில், கண்டிப்பாக அதை பார்த்து விட்டு பெரிய ஓடிடி நிறுவனங்கள் போட்டிப் போட்டு படத்தை வாங்கிவிடும் என்றும் கூடிய சீக்கிரமே ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இது மிஸ்ஸானால் அவ்ளோதான்: விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை என்றும் த்ரிஷாவுக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும் ஏகப்பட்ட தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், டீசரை பார்க்கும் போது, சூர்யா கச்சிதமாக இந்த படத்துக்கு பொருந்தியிருக்கிறார். இந்த படமும் ஏதாவது ஒரு வகையில் சொதப்பி விட்டால், அடுத்து உருவாகும் வெங்கி அட்லூரி படத்துக்கும் பெரிய சிக்கல் உருவாகும் என்று கூறப்படுகிறது. ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தை போலவே பக்காவான படமாக இந்த படத்தை கொடுப்பார் என அவர் மீது ரசிகர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X