Karuppu OTT: சூர்யாவின் ‘கருப்பு’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. லாக் பண்ண அமேசான் பிரைம்!

சென்னை: திரையரங்குகளில் வெற்றிகரமான 25வது நாள் கொண்டாட்டத்தை இன்று கருப்பு கொண்டாடி வருகிறது. 4வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று கூட 1.75 கோடி ரூபாய் வசூலை கருப்பு அள்ளியது. இந்நிலையில், அவ்வளவு சீக்கிரமாக ஓடிடியில் வெளியிடுவது ஏன் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பினாலும், அமேசான் பிரைம் உடனான பெரிய டீல் காரணமாக இந்த வாரமே கருப்பு ஓடிடியில் வெளியாகப் போவது உறுதியாகி உள்ளது.

ஜோதிகா நடித்த சிஸ்டம் திரைப்படம் நேரடியாகவே ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை கடந்த 2 வாரங்களாக பெற்று வரும் நிலையில், ஜோதிகா, சோனாக்‌ஷி உடன் இணைந்துக் கொண்டு தாறுமாறு கிளாமர் போட்டோக்களை தெறிக்கவிட்டு மேலும், ரசிகர்களை சிஸ்டம் வெப்சீரிஸை பார்க்கத் தூண்டி வருகிறார்.

Suriya s Karuppu OTT will arrive on this date at Amazon Prime Video
Photo Credit:

இந்நிலையில், கருப்பு படத்தை களத்தில் இறக்க இதுதான் தக்க சமயம் என அமேசான் பிரைம் வீடியோ இந்த வாரமே ஓடிடியில் கருப்பு படத்தை வெளியிட போகிறது.

300 கோடிக்கும் அதிகமான வசூல்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கருப்பு படத்தை கடைசி நாளில் ரிலீஸ் செய்யக் கூட முடியாமல் போராடிக் கொண்டிருந்த நிலையில், கருப்பு போல படத்தை ரிலீஸ் செய்ய மேலும், சில கோடிகளை தந்து சூர்யா உதவி செய்த நிலையில், ஆர்ஜே பாலாஜி மற்றும் படத்தின் மீது அவர் வைத்த நம்பிக்கை வீண் போகாமல் முதல் முறையாக 300 கோடி ரூபாய் வசூலை சூர்யாவுக்கு தந்து கருப்பு மெகா பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. கூடிய சீக்கிரமே அஜித் குமார் 300 கோடி கிளப்பில் இணைய வேண்டும் என்பது தான் இப்போ அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆசையாக உள்ளது.

வெற்றிகரமான 25வது நாள்: புதிய படங்கள் வெள்ளிக்கிழமை வந்தால் திங்கள் தாண்டுவதே கடினமாக இருக்கக் கூடிய சூழலில் தொடர்ந்து 4 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி 25வது நாள் வெற்றி விழாவை இன்று கருப்பு படம் கொண்டாடி வருகிறது. சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, இந்திரன்ஸ், சுவாசிகா, நட்டி நட்ராஜ், ஷிவதா உள்ளிட்ட பலர் கருப்பு படத்தில் சிறப்பாக நடித்தும் சாய் அபயங்கரின் இசை பக்காவாக படத்துக்கு கை கொடுத்ததும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்கின்றனர்.

கருப்பு ஓடிடி ரிலீஸ்: இன்னும் ஒரு 25 நாள் கூட கருப்பு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரமே கருப்பு படத்தை வரும் ஜூன் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அமேசான் பிரைமில் வெளியிடப் போவது உறுதியாகி உள்ளது என்கின்றனர். பிரைம் வீடியோவும் தேதியை குறிப்பிடாமல் 'காட் மோட் ஆன்' என எக்ஸ் தளத்தில் போஸ்ட் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓடிடியில் கருப்பு படத்தை ரீவாட்ச் போட ரெடியா இருங்க மக்கா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X