Retro OTT: சூர்யாவின் ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் தெரியுமா?
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் 1ந் தேதி ரெட்ரோ படம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் சூர்யா அதிரடியான அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்தார். படத்தில் அவரின் சூர்யாவின் நடிக்கை அனைவரும் பாராட்டினார்கள். தற்போது ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த சூப்பரான தகவல் வந்துள்ளது. அதன்படி, ரெட்ரோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

பீட்சா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படம் ரெட்ரோ. இதில், சூர்யா பாரிவேல் கண்ணன் என்ற கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டேவும் சூர்யாவும் காதலிக்கின்றனர். அப்போது, பூஜாஹெக்டே, சூர்யாவிடம் ரவுடித்தனத்தை விட்டுவிட்டுவா திருமணம் செய்து கொள்ளாமல் என்று சொல்ல, சூர்யாவும் தனது காதலுக்காக ரௌடிசத்தை விட்டுவிடுகிறான். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, தூத்துக்குடி துறைமுகத்தில் கடத்தப்பட்ட ஒரு தங்க மீன் காணாமல் போகிறது. அதை சூர்யா தான் எடுத்தார் என்று சந்தேகப்படும் சூர்யாவின் வளர்ப்பு அப்பா ஜோஜு ஜார்ஜ், திருமண விழாவுக்கு வந்து பிரச்சனை செய்கிறார். அந்த சண்டை கைகலப்பாகி கடைசியில், ஜோஜு ஜார்ஜின் கை வெட்டப்பட, சூர்யா சிறைக்குச் செல்கிறார். 7 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வரும் சூர்யா தனது காதலியை தேடி செல்கிறார்.
ஓடிடி ரிலீஸ் தேதி: இப்படம் வெளியாவதற்கு முன்பே ரெட்ரோ படத்தின் 'கனிமா' மற்றும் 'கண்ணாடி பூ' வே பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டானது. மே 1ந் தேதி ரெட்ரோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்தடுத்து தோல்வி படத்தால் துவண்டு இருந்த சூர்யாவுக்கு இப்படம் கம்பேக் படமாக அமைந்துள்ளது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை அள்ளியது. இப்படம் ரூ.235 கோடியை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரெட்ரோ படம் வரும் ஜூன் 5-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
பட பூஜை: ஆர்.ஜே.பாலாஜி படத்தை தொடர்ந்து வாத்தி , லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கடந்த வாரம் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. தனித்துவமான கதை சொல்லுவதில் பெயர் பெற்ற வெங்கி அட்லூரி, தற்போது சூர்யாவுடன் கரம் கோர்த்து இருப்பதால் இப்படத்தின் மீதா எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இப்படத்தில் மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு நிமிஷ் ரவி, படத்தொகுப்பு நவீன் நூலி, தயாரிப்பாளர்கள் எஸ். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











