OTT: தேவரா படத்துக்கு இப்படியொரு செக்கா?.. ஓடிடியில் வெளியாகும் நானியின் சூர்யாவின் சாட்டர்டே!
சென்னை: இந்த வாரம் தியேட்டரில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா படம் வெளியாக காத்திருக்கிறது. அதே போல தமிழில் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் செக் வைக்கும் விதமாக ஓடிடியில் நானியின் சூர்யாவின் சாட்டர்டே படம் இந்த வாரம் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் தொடர்ச்சியாக வெளியாகும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நானி நடித்த தசரா படம் சமீபத்தில் நடைபெற்ற ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் ஏகப்பட்ட விருதுகளை அள்ளின.

ஹாய் நான்னா படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி வெளியான சரிபோதா சனிவாரம் எனப்படும் சூர்யாவின் சாட்டர்டே திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.
சூர்யாவின் சாட்டர்டே: இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்த சூர்யாவின் சாட்டர்டே திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பட்டையைக் கிளப்பியது. தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் தெலுங்கில் பெரிதாக வசூல் செய்ய முடியாததற்கு முக்கிய காரணமாகவும் இந்த படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன கதை: அம்மாவுக்கு கொடுத்த சத்யத்தை காப்பாற்ற வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அதுவும் சனிக்கிழமை மட்டுமே தனது கோபத்தைக் காட்டும் இளைஞராக வருகிறார் நானி. முரட்டு போலீஸ் அதிகாரியாக உள்ள எஸ்.ஜே. சூர்யா ஒரு ஊர் மக்களையே அடிமைகளாக வைத்து அவருக்கு கோபம் வரும்போதெல்லாம் அடித்து வெளுத்து வரும் நிலையில், அந்த ஊர் மக்களுக்கு எஸ்.ஜே. சூர்யாவின் மீதுள்ள பயத்தை போக்கி துணிச்சலை தருவதற்காக நானி என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. ஜேக்ஸ் பிஜோய் இசையில் பிஜிஎம் எல்லாம் வேறலெவலில் இருக்கும்.
ஓடிடி ரிலீஸ்: கடந்த மாதம் இறுதியில் வெளியான நானியின் சூர்யாவின் சாட்டர்டே திரைப்படம் இந்த மாதம் செப்டம்பர் 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
தேவராவுக்கு சிக்கல்?: ஜூனியர் என்டிஆரின் தேவரா திரைப்படம் இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில், ஓடிடி ரசிகர்களை வீட்டிலேயே நானி படம் அரெஸ்ட் செய்து விட்டால் தேவரா படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறுகின்றனர். ஆனால், ஜூனியர் என்டிஆர் படத்தை பார்க்க நிச்சயம் அவரது ரசிகர்கள் பெருங்கூட்டமாக தியேட்டர்களை திணறவிடுவது உறுதி என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











