Sushmita Sen: அந்த இடத்தில் அப்படியொரு ஏற்பாடு.. திருநங்கையாக நடிக்க கஷ்டப்பட்ட சுஷ்மிதா சென்!

மும்பை: மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற நடிகை சுஷ்மிதா சென் தற்போது திருநங்கையாக புதிய வெப்சீரிஸில் மிரட்டி உள்ளார். அதற்காக தான் பட்ட கஷ்டங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஆடிசன் நோய் பாதிப்பு காரணமாக பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகியிருந்த நடிகை சுஷ்மிதா சென் ஆர்யா வெப்சீரிஸ் மூலம் மீண்டும் 2020ம் நடிக்க ஆரம்பித்தார்.

Sushmita Sen using crotch guard for turn like Transgender activist Gauri Sawant

அந்த வெப்சீரிஸ் ஹிட் அடித்த நிலையில், தற்போது Taali எனும் வெப்சீரிஸில் பிரபல திருநங்கை சமூக போராளி கெளரி சாவந்த் ஆகவே நடித்துள்ளார் சுஷ்மிதா சென்.

திருநங்கை வேடத்தில் சுஷ்மிதா சென்: திருநங்கையாக எப்போதுமே ஆண்கள் பெண்கள் போல புடவை அணிந்து கொண்டு நடிப்பதை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், நடிகைகள் திருநங்கையாக நடிக்க பெரிதளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மேலும், அந்த பாலினத்தை சேர்ந்தவர்களையே நடிக்க வைக்கலாமே என்கிற விவாதங்களும் அரங்கேறி வரும் சூழலில் திருநங்கை சமூக ஆர்வலர் கெளரி சாவந்த் ஆக நடித்திருக்கிறார் சுஷ்மிதா சென்.

கெளரி சாவந்த் பயோபிக்: புனேவில் பிறந்து வளர்ந்த கணேஷ் ஒரு கட்டத்தில் தனக்குள் இருக்கும் பெண் தன்மையை உணர்ந்து கெளரி சாவந்த் ஆக மாறுகிறார். அதன் பின்னர் அவர் படும் கஷ்டங்கள் அனைத்தையும் கடந்து வரும் அவர் தன்னை போல கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு ஆதரவாகவும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவும் தாயுள்ளத்துடன் பல சேவைகளை செய்து வருகிறார்.

மகாராஷ்ட்ராவின் தேர்தல் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவே அங்கீகரிக்கப்பட்ட அவரது பயோபிக்கில் நடிகை சுஷ்மிதா சென் தற்போது நடித்துள்ளார். டாலி எனும் பெயர் கொண்ட வெப்சீரிஸாக அவரது பயோபிக் உருவாகி உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ சினிமாவில் வெளியாகிறது. சமீபத்தில், வெளியான அதன் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Sushmita Sen using crotch guard for turn like Transgender activist Gauri Sawant

நெஞ்சை இறுக்கிக் கட்டிக் கொண்டு: கெளரியாக நடிக்க உடல் எடையை அதிகரித்து நடித்தேன். அதை விட கணேஷ் ஆக நடிக்கும் போது தான் ரொம்பவே சிரமப்பட்டேன். நெஞ்சை இறுக்கிக் கட்டிக் கொண்டு நடித்தேன். மார்பு பகுதியில் மொத்தமாக பேண்டேஜ் சுற்றிக் கொண்டு தான் ஷூட்டிங் போனேன்.

மேலும், அதை விட கொடுமையாக இரு கால்களையும் ஆண்களை போல அகட்டி நடப்பதற்கு crotch guard எல்லாம் பயன்படுத்தினேன் என அந்த பேட்டியில் சுஷ்மிதா சென் கூறியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X