பரபரப்புக்கு பஞ்சமில்லாத சுழல் .. ரசிகர்கள் எதிர்பார்த்த சுழல் 2 வெப் தொடரின் ரிலீஸ் தேதி இதோ!

சென்னை: 2022 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் நடித்த சூழல் வெப் தொடர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக இருக்கும் சூழல்2வது சீசன் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி எழுத்தில் உருவாக வெப் தொடர் தான் சுழல். சாம்பலூர் மலை கிராமத்தில் 9 நாட்கள் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. திருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே அந்த ஊரில் சிமெண்ட் ஃபேக்டரி ஒன்று தீக்கிரையாகிறது. இந்த நேரத்தில் தான், அந்த கம்பெனியின் யூனியன் தலைவர் பார்த்திபனின் மகள் நிலா காணாமல் போகிறாள். இந்த இரு பிரச்சனையையும் விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகளாக ஸ்ரேயா ரெட்டி மற்றும் கதிர் விசாரிக்கின்றனர். பார்த்திபனின் மற்றொரு மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.பேக்டரி தீ பிடித்தது எப்படி, பார்த்திபனில் மகள் என்ன ஆனார் என விறுவிறுப்பான கதைக்களத்துடன் கதை நகர்கிறது.

Suzhal 2 OTT amazon prime video 2

சுழல் இணையத் தொடர்: 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில் யாரை சந்தேகிப்பது, யார் குற்றவாளி என கதையை அழகாக நகர்த்தி இருந்தனர் புஷ்கர் மற்றும் காயத்ரி. அதுமட்டுமில்லாமல் சிறுவயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இந்த தொடரில் காட்டப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு எபிசோடும் அட்டகாசமாக இருந்தது.

சுழல் 2:சுழல் இணையத் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் உருவாக இருப்பதாக படக்குழு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில்,சுழல் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராக படக்குழு அறிவித்திருந்த நிலையில், 'சுழல் 2' வெப் தொடர் வெளியாகும் தேதி குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,இத்தொடர் இந்த மாதம் 28 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் பாகத்தை போல இந்த பாகமும், த்ரில்லாக இருக்குமா இல்லை, வேறு கதைக்களத்தை கொண்டதாக இருக்குமான என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X