The Housemaid Review:தமிழில் பேசும் தலைவி சிட்னி ஸ்வீனி.. மொரட்டு சம்பவமான ‘தி ஹவுஸ்மெயிட்’ விமர்சனம்!

சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தலைவி சிட்னி ஸ்வீனி நடித்துள்ள 'தி ஹவுஸ்மெயிட்' (The Housemaid) படத்தை தமிழ் டப்பிங்கிலேயே கண்டு ரசிக்கும் விதமாக வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு வெளிநாடுகளில் தியேட்டர்களில் வெளியான இந்த அடல்ட் சைக்கோ த்ரில்லர் திரைப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஃப்ரைடா மெக் ஃபேடன் எழுதிய நாவலில் இருந்து தழுவப்பட்டு உருவான கதை தான் இந்த 'தி ஹவுஸ்மெயிட்'. ஒரு கொலையை செய்துவிட்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு மேலும், 5 ஆண்டு தண்டனை மீதம் உள்ள நிலையில், பரோலில் வெளிவரும் மில்லி (சிட்னி ஸ்வீனி) ஒரு அழகான வீட்டிற்கு பணிப்பெண் வேலைக்காக இண்டர்வியூவுக்கு வருகிறார்.

Sydney Sweeney s The Housemaid Review in Tamil OTT watch details are also here
Photo Credit:

நீனா வின்செஸ்டர் (அமாண்டா சேஃப்ரெட்) தனது வீட்டுக்காக மில்லியை நேர்காணல் செய்து வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார். நீனாவின் கணவரான ஆண்ட்ரூ வின்செஸ்டர் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள மில்லியை பார்க்கிறார். அந்த தம்பதியினருக்கு பள்ளிக்குச் செல்லும் சிசிலியா எனும் பெண் குழந்தையும் உள்ளது. இந்த குடும்பத்தில் என்ன கும்மாங்குத்து எல்லாம் நடக்கிறது. சிட்னி ஸ்வீனி யாரை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்றார். இங்கே அவருக்கு என்னமாதிரியான பிரச்னைகள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை பரபரப்பு கொஞ்சம் கூட குறையாமல் 18 பிளஸ் சிட்னி ஸ்வீனி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த படத்தை இயக்குநர் பால் ஃபெயிக் கொடுத்துள்ளார்.

தி ஹவுஸ்மெயிட் கதை: பரோலில் சிறையில் இருந்து வரும் இளம்பெண்ணான மில்லிக்கு குடும்பம், உறவினர் என யாருமே இல்லை. தங்க வீடு கூட இல்லாத சூழலில் தனது பழைய காரிலேயே கண்ட இடங்களில் பார்க்கிங் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். பிரம்மாண்ட மாளிகை போன்ற வீடு ஒன்றில் அவருக்கு நீனா வேலை கொடுக்கிறார்.

தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னையும் தனது குழந்தையையும் பார்த்துக் கொள்ள பணியாளராக மில்லியை வேலைக்கு வைக்கிறார். அவருக்கு தங்க வீட்டிலேயே மாடியில் ஒரு அறையையும் ஒதுக்குகிறார்.

அன்பாக கவனித்துக் கொண்டு வேலைக்காரிக்கு எல்லா உதவியையும் செய்வதாக அன்புடன் பேசும் நீனாவை நம்பி மில்லியும் வேலையில் சேர்கிறார். ஆனால், அடுத்த நாளில் இருந்து நீனா ஒரு சைக்கோவை போல நடந்துக் கொள்கிறார். எல்லாவற்றையும் போட்டு உடைத்து, வீட்டையே குப்பைக்காடாக மாற்றி மில்லியை இஷ்டத்துக்கு வேலை வாங்குகிறார்.

மில்லிக்கு ஆறுதல் கூறும் அழகான நீனாவின் கணவருடன் மில்லி நெருங்கிப் பழகத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஷோ ஒன்றை பார்க்கவும் ஹோட்டலில் ரூம் போட்டு மனைவிக்கு தெரியாமல் பலான வேலையிலும் இறங்குகின்றனர். அந்த விவகாரம் நீனாவுக்கு தெரிய வந்ததா? அதன் பின்னர் நடக்கும் ரியல் ட்விஸ்ட் என படம் கடைசி வரை போர் அடிக்காமல் திகிலுடன் செல்லும் விதம் சிறப்பாக உள்ளது.

Sydney Sweeney s The Housemaid Review in Tamil OTT watch details are also here
Photo Credit:

பார்க்கலாமா? வேண்டாமா?: ஆரம்பத்தில் நீனாவை சைகோவாகா காட்டி வந்த நிலையில், கடைசியில் ஏற்படும் ரியல் ட்விஸ்ட்டுக்காகவே இந்த ஹவுஸ்மெயிட் படத்தை தாராளமாக பார்க்கலாம். படுக்கையறை காட்சியில் முழு நிர்வாணமாக (தமிழ் டப்பிங்கில் கூட) சிட்னி ஸ்வீனி சம்பவம் செய்துள்ள நிலையில், குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவியாக சேர்ந்து பார்க்கலாம்.

ஆலியா பட் நடித்த 'டார்லிங்ஸ்' படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதே போன்ற சைக்கோ கதை தான். அழகான இடத்தில் இருக்கும் ஆபத்துக்கள் பற்றியும் பழம் போல பேசுபவர்கள் எப்படி விஷ பாட்டிலாக இருப்பார்கள் என்பதற்கும் அவர்களுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என கிளைமேக்ஸ் முடித்த விதமும் சபாஷ் போட வைக்கிறது. தாராளமாக ஓடிடியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X