Web series: சினிமாவை ஆட்சி செய்யும் ஓடிடி தளங்கள்..இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்கள்!

சென்னை: ஓடிடி தளங்களின் அதிகரிப்பால் ஓடிடியில் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.

இதனால், ஓடிடி தளங்கள் தங்கள் வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ள வாரா வாரம் புதுபுது படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு வருகின்றனர்.

taali and Mathagam web series releasing on OTT this week

இணையத்தில் வெளியாகும் இணையத்தொடர்களை ரசித்துப் பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இருப்பதால் இந்த வாரம் தமிழ், இந்தி, இங்கிலீஸ் என ஏகப்பட்ட வெப்தொடர்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

மத்தகம்: இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள மத்தகம் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

taali and Mathagam web series releasing on OTT this week

தாலி: சுஷ்மிதா சென் தாலி (Taali) என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடரை ஜியோ சினிமாவில் ஆகஸ்ட் 15 ந் தேதியான நாளை வெளியாக உள்ளது

10 Days of a Bad Man:10 டேஸ் ஆஃப் எ பேட் மேன் வெப் சீரிஸை உலுஸ் பைரக்டார் இயக்கியுள்ளார். ஒரு தனியார் புலனாய்வாளர் ஒருவர் ஒரு மாளிகையில் நடக்கும் கொலையின் பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை வெளியில் கொண்டு வருகிறார். 10 Days of a Bad Man என்ற இந்த ஆங்கில வெப் தொடரை ஆகஸ்ட் 18ந்ந் தேதி நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

taali and Mathagam web series releasing on OTT this week

Guns & Gulaabs: ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே அவர்களில் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர்தான் கன்ஸ் & குலாப்ஸ். இந்தத் தொடரில் ராஜ்குமார் ராவ் , துல்கர் சல்மான் , ஆதர்ஷ் கவுரவ் , கௌதம் ஷர்மா, கௌரவ் சர்மா மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸில் வரும் 18ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X