Crew Review: தங்கத்தை கடத்தும் 3 ஏர் ஹோஸ்டஸ்.. முதல் சீனே மாட்றாங்க.. அப்புறம் செம ட்விஸ்ட்!

மும்பை: பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், ஜோதிகா, அஜய் தேவ்கன், மாதவன் நடித்த ஷைத்தான் திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது. அதே போல தபு, கரீனா கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உள்ளிட்ட 3 பாலிவுட் நடிகைகள் கவர்ச்சி பொங்க நடித்து கலக்கிய ’க்ரூ’ (Crew) திரைப்படம் 157 கோடி வசூலை ஈட்டியது.

இந்த ஆண்டு ஷாருக்கான் படம் இல்லாத நிலையில், பாலிவுட் டல் அடித்து வருகிறது. அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடித்த படே மியான் சோட்டே மியான் மற்றும் மைதான் படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன. கடந்த ஒரே வருடத்தில் ஏகப்பட்ட பெரிய ஹிட் படங்களை கொடுத்த நிலையில், 6 மாதங்கள் ஆகியும் பாலிவுட் டல் அடித்து வருகின்றன.

OTT Review Crew


இதில், ரசிகர்களை அதிகம் கவர்ந்த ’க்ரூ’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், மீண்டும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டாப் டிரெண்டிங்கில் உள்ள அந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க..

க்ரூ கதை: கோஹினூர் ஏர்வேஸில் விமான பணிப்பெண்களாக பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளான க்ரித்தி சனோன், தபு மற்றும் கரீனா கபூர் நடித்துள்ளனர். விஜய் மல்லையாவை ரெப்ரசண்ட் செய்வது போல படத்தில் விஜய் வால்யா எனும் கதாபாத்திரத்தில் கல்கி படத்தில் கமாண்டர் மனாஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல வங்க மொழி நடிகர் நடித்துள்ளார். விமான பணிப்பெண்களை வழிநடத்தும் அந்த விமானத்தின் கேப்டன் தங்கக் கடத்தலில் ஈடுபடும் போது திடீரென இறந்து விடுகிறார். அவரிடம் இருக்கும் தங்கங்களை திருடி வாழ்வில் செட்டில் ஆகி விடலாம் என கரீனா கபூர் ஐடியா கொடுக்க தபு அதை தடுத்து வேண்டாம் மாட்டிக் கொண்டால் சிக்கலாகி விடும் எனக் கூறி கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார்.

OTT Review Crew


அதன் பின்னர் கேப்டன் யாருடன் கூட்டு வைத்து தங்கத்தை கடத்தினார் என்பதை கண்டுபிடிக்கும் 3 தோழிகளும் அவரை பின் தொடர்ந்து கண்டு பிடித்து விடுகின்றனர். பின்னர், அவருடன் ஒப்பந்தம் செய்து தங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையை சமாளிக்க தங்கத்தை உருளை வடிவிலான ஃபாரீன் சாக்லேட்கள் போல மாற்றி பக்காவாக கடத்தி ராணி போல வாழ்கின்றனர். உடனடியாக கஸ்டம்ஸில் இவர்கள் சோஷியா மீடியா போஸ்ட் மற்றும் உடன் பணிபுரிந்த ஒருவர் போட்டுக் கொடுக்க மாட்டுகின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா? மெயின் வில்லனை இந்த 3 பேரும் சேர்ந்து என்ன செய்தார்கள் என்பதை எந்தளவுக்கு கிளாமரும் காமெடியும் பொங்க சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு படமாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன்.

OTT Review Crew

பார்க்கலாமா? வேண்டாமா?: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்தி மொழியில் தான் இந்த படம் இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் இல்லை. ஆனாலும், படத்தை இயக்கியுள்ள விதத்திற்கு மொழி பெரிய தடையாகவே இருக்காது. அந்தளவுக்கு தபு, கரீனா கபூர் மற்றும் க்ரித்தி சனோன் கடைசி வரை ரசிகர்களை இந்த படத்தை தங்கள் நடிப்பாலும் அவர்கள் அணிந்திருக்கும் தாராள உடைகளாலும் பார்க்க வைத்து விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X