Tamannaah Bhatia: கீழே போகாத காடு இருக்கா? என்ன தமன்னா இப்படி இறங்கிட்டீங்க.. உச்சகட்ட ஆபாசம்!

சென்னை: நடிகை தமன்னா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ள Jee Karda வெப்சீரிஸில் குமட்டும் ஆபாச காட்சிகளும், டபுள் மீனிங் இல்லாமல் நேரடி ஆபாச வசனங்களே தமிழ் டப்பிங்கிலும் அதிகளவில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

ஓடிடி படைப்புகளுக்கு சென்சார் இல்லாத நிலையில், இந்தி வெப்சீரிஸ்கள் நிர்வாணமாகவே நடிகைகளை நடிக்க வைப்பது மட்டுமின்றி அதிகளவிலான ஆபாச வசனங்களை கொண்டுள்ளன.

Tamannaah Bhatia Jee Karda web series fully contains with adult contents shocks fans

அதுவும் தமிழ் டப்பிங்காக வரும் போது கூட எந்தவொரு தடையும் இன்றி மோசமான அசிங்கமான கெட்ட வார்த்தைகள் அப்படியே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகள் பேசி வெளியாகி ஷாக்கை கொடுக்கின்றன.

வெளியானது தமன்னா வெப்சீரிஸ்: தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள ஜீ கர்தா வெப்சீரிஸின் டீசர் வெளியான போதே அதில், படு மோசமான ஆபாச காட்சிகளில் நடிகை தமன்னா நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவரா இப்படி ஓடிடி வெப்தொடரில் உச்சகட்ட ஆபாச காட்சிகளில் நடித்துள்ளார் என கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், அமேசான் பிரைமில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் அந்த வெப்சீரிஸ் இன்று வெளியானது.

Tamannaah Bhatia Jee Karda web series fully contains with adult contents shocks fans

என்ன கதை: பள்ளியில் இருந்தே ஆண்களும் பெண்களும் ஒன்றாக நண்பர்களாக பழகி வரும் நிலையில், முதல் காட்சியிலேயே ஒரு மேஜிக்மேனை போய் பார்க்கலாம். அவர் ஃபேஸ் ரீடிங் பண்ணி நம்முடைய எதிர்காலத்தை சொல்வார் என செல்கின்றனர்.

அந்த மேஜிக் மேன் சொன்னதெல்லாம் 2022ல் இந்த காலத்தில் அந்த நண்பர்களுக்கு நடக்கிறதா? அவர்களின் காதல், காம வாழ்க்கைகளுக்கு என்ன என்ன சிக்கல் வருகிறது என்கிற ரீதியில் இந்த வெப்சீரிஸ் கதை உருவாகி உள்ளது.

வெக்கேஷன் முதல் அபார்ஷன் வரை: நண்பர்களின் 3ம் ஆண்டு திருமண நாள் விழாவுக்கு தனது காதலன் உடன் பைக்கில் செல்லும் தமன்னா அந்த விழாவில் தோழர்களுடன் சேர்ந்து சரக்கடித்து விட்டு டேபிள் ஒன்றின் மீது ஏறி உளர ஆரம்பிக்கிறார்.

Tamannaah Bhatia Jee Karda web series fully contains with adult contents shocks fans

அப்போது அவரது காதலர் திடீரென கையில் இருந்த நீலக் கல் மோதிரத்தை எடுத்து தமன்னாவிடம் நீட்டி ப்ரபோஸ் செய்ய அவரது தோழிகளும் ஓகே சொல்லு எனக் கூற நிச்சயம் செய்துக் கொள்கிறார்.

தமன்னாவின் அம்மா மற்றும் காதலனின் பெற்றோர்கள் சந்திக்கும் நிகழ்வு நடக்கிறது. அப்போது, தமன்னாவின் அம்மா கேஷுவலாக வெக்கேஷன் முதல் அபார்ஷன் வரை எல்லாமே பண்ணிட்டீங்களே, திருமணம் செய்ய மட்டும் ஏன் யோசிக்கிறீங்க என கேட்கும் வசனங்கள் எல்லாம் கேட்டாலே கடுப்பை கிளப்பும் விதமாகத்தான் உள்ளது.

Tamannaah Bhatia Jee Karda web series fully contains with adult contents shocks fans

கீழே போகாத காடு இருக்கு: படுக்கையறை காட்சிகளில் படு தாராளமாக இந்த வெப்சீரிஸில் நடிகை தமன்னா நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அதே போல டபுள் மீனிங் வசனம் இல்லாமல் எல்லாமே ஸ்ட்ரெய்ட் மீனிங் வசமாக அவர் அசிங்கமாக ஆபாச வார்த்தைகளை பேசுவதை எல்லாம் தமிழ் டப்பிங்கில் காது கொடுத்தே கேட்க முடியவில்லை என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அதிலும், காதலருடனான உடலுறவு காட்சியில் நடிகை தமன்னா, வேக்ஸிங் செய்யவில்லை என்றும் கீழே போகாத காடு இருக்கு என்றும் பச்சையாகவே பேசும் வசனங்கள் எல்லை மீறிய ஆபாசத்தை அள்ளித் தெளித்திருக்கிறது.

ஜீ கர்தா வெப்சீரிஸே இப்படி இருக்கிறதே அடுத்து அவருடைய காதலரான விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 எப்படி இருக்கும் என ஜூன் 29ம் தேதிக்காக தமன்னாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X