OTT: காதலருடன் அடுத்த வெப்சீரிஸ் ப்ரோமோஷனை ஆரம்பித்த தமன்னா.. இதுலயும் ஸ்பெஷல் இருக்குமா?

மும்பை: ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் மூலம் சர்வதேச அளவில் டிரெண்டாகி உள்ள நடிகை தமன்னா, தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து அடுத்த வெப்சீரிஸ் ப்ரோமோஷனை செய்து வருகிறார்.

ஆனால், ஜெயிலர் படத்தின் காவாலா ப்ரோமோஷனுக்கே தமன்னா நடித்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஓடிடி படைப்புகள் தான் காரணம் என்பதை யாருமே மறக்க முடியாது.

Tamannaah Bhatia paired with Vijay Varma for her Aakhri Sach web series screening

அமேசானில் வெளியான ஜீ கர்தா வெப்சீரிஸ் மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜி என எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் தமன்னா.

தமன்னாவின் புதிய வெப்சீரிஸ்: இயக்குநர் ராபி கிரேவல் இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் Aakhri Sach டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள நிலையில், நேற்று இரவு அதன் ஸ்க்ரீனிங் மும்பையில் உள்ள பிரபல திரையரங்கில் செலிபிரிட்டி ஷோவாக போடப்பட்டது.

அதில், தனது காதலர் விஜய் வர்மாவுடன் நடிகை தமன்னா கலந்து கொண்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முன்னதாக ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்சீரிஸ் ப்ரோமோஷன்களுக்கும் காதலருடன் கலந்து கொண்டார் தமன்னா.

Tamannaah Bhatia paired with Vijay Varma for her Aakhri Sach web series screening

முதல் முறை லிப் கிஸ்: நடிகை தமன்னா சினிமாவில் பல வருடங்களாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும், இதுவரை எந்தவொரு படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்கிற பாலிசியுடனே நடித்து வந்தார். முதன்முதலாக காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியில் தான் தமன்னாவுடன் லிப் கிஸ் மற்றும் படுக்கையறை காட்சிகளில் விஜய் வர்மாவுடன் படு நெருக்கமாக நடித்து மிரட்டினார்.

இதிலும் ஸ்பெஷல் சீன் இருக்குமா: ஜீ கர்தா வெப்சீரிஸில் ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளில் போல்டாக தமன்னா நடித்த நிலையில், அதனை தொடர்ந்து தனது காதலருடனும் அனலை கிளப்பி இருந்தார்.

அதே வைபை ஜெயிலர் படத்திலும் பயன்படுத்த பிளான் பண்ண நெல்சன் காவாலா பாட்டில் படு கவர்ச்சியாக ஆட வைத்திருந்தார். இந்நிலையில், புதிதாக வெளியாக உள்ள வெப்சீரிஸிலும் தமன்னாவின் ஸ்பெஷல் சீன் இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்க நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் போல த்ரில்லர் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X