ஓடிடியில் தாமதமாகும் ஹனுமான்.. கடுப்பான பேன்ஸ்.. இயக்குனர் கொடுத்த விளக்கம்!

சென்னை: பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி மாதம் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் ஹனுமான். இப்படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்த இப்படம், வெளியாகி இரண்டு மாதங்களாகியும் ஓடிடியில் வெளியாகவில்லை, தொடர்ந்து தாமதமாகி வருவதால், ரசிகர்கள் குழபபமடைந்து வருகின்றனர்.

ஹனுமான் படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தனர்.அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் சேர்ந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இப்படம் வெளியான முதல்நாளே மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்ததால், படம் வசூலை அள்ளியது.

Teja Sajja s HanuMan OTT release delay Director Prasanth Varma explains

ரசிகர்களை கவர்ந்த கதை: அஞ்சனாத்ரி என்ற கிராமத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் வரலட்சுமியும் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்கு மருத்துவப் படிப்பை முடித்த தேஜா சஜ்ஜாவின் தோழியான அமிர்தா ஐயர் ஊருக்கு வருகிறாள். அப்போது மீனாட்சியின் பேருந்தில் கொள்ளையர்கள் ஏறுகிறார்கள். அந்த நேரத்தில் அனுமன் வந்து அமிர்தா ஐயரை காப்பாற்றுகிறார். அப்போது அந்த கொள்ளையர்கள் ஹனுமானை அடித்து ஆற்றில் தூக்கி வீசுகிறார்கள்.

வசூலை அள்ளியது: ஹனுமான் தண்ணீருக்கு அடியில் மூழ்கும்போது,​ அவன் கண்ணில் முத்து ஒன்று தென்படுகிறது. அந்த முத்துவால் தேஜா சஜ்ஜா சூப்பர்மேன் போல் ஆகிவிடுகிறார். இந்த அபூர்வ முத்து பற்றி விஷயம் வில்லன் வினய் ராய்க்கு தெரியவர அதை அடைய திட்டம் போடுகிறான். இறுதியில் யார் வென்றது என்பது தான் படத்தின் கதை. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது என படம் பார்த்தவர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்கள்.

தாமதம் வேண்டுமென்றே அல்ல: இந்நிலையில், ஹனுமான் திரைப்படம் மகா சிவராத்திரி அன்று (மார்ச் 8) ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், எதிர்பார்த்தபடி படம் வெளியாகாததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதே போல, ஹனுமான் படத்தின் ஹிந்தி பதிப்பு மார்ச் 16ந் தேதியான இன்று முதல் ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் படத்தின் தெலுங்கு பதிப்பு எப்போது Zee5 இல் வெளியிடப்படும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த வார இறுதியில் ஹனுமான் ஸ்ட்ரீம் செய்வார் என்று பலர் எதிர்பார்த்தனர், ஆனால் அதுவும் தாமதமாவதால் தொடர்ந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவருகின்றனர்.

இயக்குநர் விளக்கம்: ஹனுமான் OTT வெளியிடுவது தாமதமாவது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என இயக்குநர் பிரசாத் வர்மா எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். கூடிய விரைவில் படத்தை உங்களிடம் கொண்டு வரவும் நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். சிறப்பான ஒன்றை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். தயவு செய்து எங்களைப் புரிந்துகொண்டு தொடர்ந்து ஆதரவளிக்கவும் என பதிவிட்டுள்ளார்.மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஹனுமான் படக்குழுவினர் சந்தித்தையும், சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X