விஜய் சேதுபதிக்கு உயர்ந்து வரும் தெலுங்கு மார்க்கெட் தெலுங்கில் OTT யில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்
சென்னை: 2019ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் பாசில், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் திரைக்கதை எழுதி இருந்தனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

குவிந்த விருதுகள்
2011ல் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமாக வெளியான ஆரண்ய காண்டம் வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. தாமதமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்றது.

தேசிய விருது
2019ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படமாக சூப்பர் டீலக்ஸ் வெளியானது. இந்த முறை ரசிகர்கள் சுதாரித்து கொண்டு படத்தை வேற லெவலில் வெற்றி பெற செய்தனர். இந்த திரைப்படம் பல விருதுகளை குவித்தது. விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.

திருநங்கை கதாபாத்திரம்
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். படம் வெளியான போதே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது.
தற்போது அவருக்கு தெலுங்கு மார்க்கெட் உயர்ந்து வருகிறது.

ஆகஸ்ட் 6 வெளியீடு
இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி
தெலுங்கின் பிரபலமான ஆஹா OTT தளத்தில் சூப்பர் டீலக்ஸ் தெலுங்கு டப்பிங் வெளியாகவுள்ளது. இது டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











