கிளாமர் மட்டும்தான் காட்டுவாருன்னு நினைச்சீங்களா.. தர்ஷா குப்தா மனசு எவ்ளோ பெருசுன்னு பாருங்க!
சென்னை: ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள தலைமைச் செயலகம் வெப் தொடரில் பரத்துக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக அவர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த தர்ஷா குப்தா திடீரென தனது சேவை முகத்தையும் காட்டியுள்ளார்.
விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி சீசன் 2ல் போட்டியாளர் பங்கேற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலேயே இரண்டாவது சீசன் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில், தர்ஷா குப்தா போட்டியாளராக பங்கேற்ற நிலையில் அவருக்கு சினிமாவில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பும் கிடைத்தது.

சினிமாவை தாண்டி தற்போது ஓடிடி வெப்சீரிஸ்களிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் தர்ஷா குப்தா. அவர் நடித்த முதல் வெப்சீரிஸே ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சிக்கன்னி: தமிழ் சினிமாவில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல கவர்ச்சி நடிகைகள் நடித்துள்ளனர். சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்களை அதிகம் கவரும் கவர்ச்சிக் கன்னியாக நடிகை தர்ஷா குப்தா ஏகப்பட்ட தாராள புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டதாக கமெண்ட்டுகள் குவிந்தன.

சில்வர் ஸ்கிரீனில் சீரியல் நடிகை: விஜய் டிவியில் இருந்து ஏராளமான நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு ஒரு ஜம்பாக தாவியுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து ஹீரோயினாக ஷைன் ஆனார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மோகன். ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் யோகி பாபு நடித்த வரும் மெடிக்கல் மிராக்கிள் படத்திலும் அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைமைச் செயலகம்: வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பிசன், சந்தான பாரதி, பிக் பாஸ் நிரூப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தலைமைச் செயலகம் வெப் சீரிஸில் பரத்துக்கு ஜோடியாக காவல்துறை அதிகாரியாக தர்ஷா குப்தா சுந்தரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்ஷா குப்தா நடித்ததிலேயே வெற்றிப் பெற்ற படைப்பாக தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் தான் மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டினி தினம்: கொரோனா காலத்தில் வறுமையில் வாடும் பலருக்கு நேரில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வந்த தர்ஷா குப்தா மீண்டும் தனது சேவையை பட்டினி தினமான இன்று நடத்தியுள்ளார். நலிந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வழங்கிய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். கவர்ச்சியை தாண்டி ஆக்ஷனிலும் கலக்குவேன் என ஓ மை கோஸ்ட் ஸ்டன்ட் வீடியோவை வெளியிட்ட தர்ஷா குப்தா தற்போது தனது தாராள மனசை வெளிப்படுத்தும் விதமாக "பசியால் வாடுபவர்களுக்கு உணவூட்டி மகிழ்வோம்" என கேப்ஷன் கொடுத்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











