ஓடிடியில் வெயிட் காட்டும் ஸ்ரேயா ரெட்டி.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திட்டாரா விஷால் அண்ணி?

சென்னை: நடிகர் விஷாலின் அண்ணியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி திமிரு படத்தில் நடித்து தூள் கிளப்பி இருப்பார். அதன் பின்னர், பல ஆண்டுகள் அதிகமாக ஷைன் ஆகாத அவர் தற்போது வரிசையாக படங்கள் மற்றும் ஓடிடி வெப்சீரிஸ்கள் என நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் வெளியான சுழல் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டிய ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் வெளியான தலைமை செயலகம் படத்தில் லீடு ரோலில் நடித்து தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி உள்ளார்.

OTT Sriya Reddy salary Salaar Thalaimai Seyalagam Suzhal

பிரபாஸின் சலார் படத்திலும் இவருக்கு நீலம்பரி டைப் ரோல் கொடுக்கப்பட்டு இருக்கும். இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் மேலும், வெயிட்டாக இருக்கும் என தெரிகிறது.

q 2002ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், தோரணை, வெடி, சில சமயங்களில், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஓடிடியில் மாஸ்: ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் நடிப்பில் வெளியான சுழல் வெப்சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ரேயா ரெட்டி சுழல் 2 வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ஸ்ரேயா ரெட்டியின் தலைமைச் செயலகம் வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. மேலும், பல வலுவான கதாபாத்திரங்களை கொடுத்தாலும் தூக்கி சாப்பிடுவார் ஸ்ரேயா ரெட்டி என பலரும் பாராட்டி வருகின்றனர்.

தலைமை செயலகம்: வசந்த பாலன் இயக்கத்தில் வெயில் படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கத்தில் தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் நடித்துள்ளார். முதலமைச்சராக ஆடுகளம் கிஷோர் நடித்துள்ள நிலையில், அவரது நம்பிக்கையை பெற்ற பத்திரிகையாளராக வரும் ஸ்ரேயா ரெட்டி கிளைமேக்ஸில் எப்படி முதல்வராக மாறுகிறார் என்கிற கதையை செம த்ரில்லிங்காகவும் விறுவிறுப்பாகவும் வசந்தபாலன் கொடுத்துள்ளார்.

சம்பளத்தை ஏத்திட்டாரா?: சலார் படத்துக்கு 35 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய ஸ்ரேயா ரெட்டி தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் லீடு ரோலில் நடிக்க 40 லட்சம் வரை தனது சம்பளத்தை உயர்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தனது சம்பளத்தை 50 லட்சமாக உயர்த்தவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர். நடிக்கவே தெரியாத நடிகைகள் கோடிக் கணக்கில் வாங்கும் போது ஸ்ரேயா ரெட்டிக்கு 50 லட்சம் தாராளமாக கொடுக்கலாம் என அவரது ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பவன் கல்யாண் படத்தில்: சலார் படத்தை தொடர்ந்து சலார் 2, பவன் கல்யாணின் ஓஜி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து வருகிறார். தமிழிலும் இவரை வில்லியாக சில படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X