முதல்வர் குடும்பத்தை மையமா வச்சு.. அரசியல் ட்விஸ்ட்.. ’தலைமைச் செயலகம்’ வெப்சீரிஸ் மக்கள் கருத்து!
சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் ஆடுகளம் கிஷோர், பரத், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் zee5 ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த வாரம் ரசிகர்கள் அதற்கு அதிக வரவேற்புகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அரசியலை இந்த வெப் சீரிஸ் பல்வேறு குறியீடுகளுடன் பேசுவதாக சோசியல் மீடியாவில் பலரும் இந்த வெப்சீரிஸ் குறித்த கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள தலைமைச் செயலகம் வெப் சீரிஸுக்கு இளம் பரிதி என்பவர் வசனம் எழுதியுள்ளார். அவருக்கான பாராட்டுக்களையும் ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.

ஆடுகளம் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் முதல்முறையாக ஓடிடி பக்கம் வந்துள்ள நிலையில் தரமான வெப்சீரிஸ் ஒன்றை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.
தரமான வெப்சீரிஸ்: தலைமை செயலகம் வெப்சீரிஸ் ஃபயராக உள்ளது. தரம் தரம் தரம்.. செம்ம வொர்த் என இந்த ரசிகர் அந்த வெப்சீரிஸை அனைவரும் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அந்தளவுக்கு வெப்சீரிஸ் விறுவிறுப்பாகவும் ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் டர்ன்களுடன் கடைசி வரை பார்க்க வைப்பதாக கூறியுள்ளார்.


யார் இந்த புதிய பரிதி?: "ZEE ல் தலைமைச் செயலகம் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அடியேன் கருதுவது அதன் வசனங்களை! யார் இந்த புதிய பரிதி? பெயரில் வீசுகிற திராவிட வாசம், தொடர் எங்கும் நிறைந்துள்ளது. கழகங்களின் சொல்லாடலை சரியாக பயன்படுத்தி எழுதப்பட்ட வசனங்கள் தொடரை நமக்கு நெருக்கமானதாக மாற்றி விட்டது." என இந்த ரசிகர் வெப்சீரிஸில் இடம்பெற்ற வசனங்கள் குறித்து பாராட்டியுள்ளார்.

முதல்வர் குடும்பத்தை மையமா வச்சு: "தலைமைச் செயலகம் (2024) முதல்வர் குடும்பத்தை மையமா வச்சு அதை சுத்தி அரசியல் திரைக்கதை அமைச்சு செமையா ஒரு சீரியஸ் பண்ணியிருக்காரு வசந்தபாலன் சார். இவங்க ஸ்ரேயா ரெட்டி நடிப்புக்காகவே இந்த தொடரை பார்க்கலாம் மக்கா" என அந்த வெப்சீரிஸை பாராட்டியுள்ளார்.


மொக்க இல்ல: "Ramyanambesan வெறித்தனம், கிஷோர் & கனிய இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாம். புதுசா சொல்லிக்கிற மாறி எதுவும் இல்ல, என்னால எல்லாமே கெஸ் பண்ண முடிஞ்சது. திரைக்கதை கடைசி எபிசோட் மட்டும் விறுவிறுப்பா இருக்கும், மத்த எல்லாம் ரொம்ப அமைதியா போகும். அதுக்காக மொக்க எல்லாம் இல்ல," என இந்த நெட்டிசன் கொஞ்சம் கலவையான விமர்சனத்தையும் கொடுத்துள்ளார்.
சன் டே பார்க்க செம வெப்சீரிஸ்: வீக்கெண்டான ஞாயிற்றுக்கிழமை தியேட்டர்களில் இந்த வாரம் வெளியான தமிழ் படங்களான சாமானியன் மற்றும் பிடி சார் போர் அடித்தால் கண்டிப்பாக ஓடிடி ரசிகர்கள் வீட்டில் இருந்தே இந்த வெப்சீரிஸை பார்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹாலிவுட் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஃபியூரியோஸா ரிலீஸ் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தமிழில் வெளியான வெப்சீரிஸ்களில் இன்ஸ்பெக்டர் ரிஷியை தொடர்ந்து தலைமைச் செயலகம் ஸ்கோர் செய்துள்ளது. விரைவில் சுழல் 2 வெப்சீரிஸ் வர காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











