தியேட்டர் மற்றும் ஓடிடியில் நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட்.. எதை எந்த தளத்தில் பார்க்கலாம்!

சென்னை: வெள்ளிகிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில், நாளை திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் பல்வேறு மொழி திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம், ஹரி ஹர வீர மல்லு, தலைவன் தலைவி படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதே போல, ஓடிடியில் விஜய் ஆண்டனி நடத்த மார்கன் படமும், வரலாற்று காவியம், சஸ்பென்ஸ் த்ரில்லர் என பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஹரி ஹர வீர மல்லு: தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் படம் ஹரி ஹரா வீர மல்லு. கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாகர் ராவ் தயாரிக்க ஏ எம் ரத்தினம் வெளியிட்டுள்ளார். இதில் பவன் கல்யாண், பாபி தியோல், நாசர், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், சுனில், ஐயப்ப சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த அதிரடி திரைப்படம் ஜூலை 24ந் தேதியான இன்று ஐந்து மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

Thalaivan Thalaivi Maargan OTT

தலைவன் தலைவி: விஜய்சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படத்தை பாண்டியராஜ் இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நாளை தியேட்டரில்வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இருந்து பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மாரீசன்: 'மாமன்னன்' படத்தில் வடிவேலுவுடன் நடித்த பிரபலம் பகத் பாசில் 'மாரீசன்' படத்தின் மூலம் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்துள்ளார். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். நகைச்சுவை திரைப்படமான இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

மஹாவதார் நரசிம்மா: ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மகா அவதார் நரசிம்மா நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. அஸ்வின் குமார் இயக்கியுள்ள இப்படம், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையமாகக் கொண்ட இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

So Long Valley (இந்தி): மான் சிங் இயக்கியுள்ள சோ லாங் வேலி படத்தில் அகன்க்ஷா பூரி, த்ரிதா சவுத்ரி மற்றும் விக்ரம் கோச்சர் ஆகியோர் நடித்துள்ளனர். சௌர்யா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஜூலை 25ந் தேதியான நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

தி ஃபெண்டாஸ்டிக் ஃபோர்(ஆங்கிலம்): மார்வெல் தயாரிப்பில் உருவாகியுள்ள தி ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படத்தை Matt Shakman இயக்கியுள்ளார். Pedro Pascal, Vanessa Kirby, Joseph Quinn ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஜூலை 25ந் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஹண்டர் சீசன் 2: பிரின்ஸ் திமான் மற்றும் அலோக் பத்ரா இணைந்து உருவாக்கியுள்ள ஹண்டர் சீசன் 2 வெப் தொடரில் சுனில் ஷெட்டி மற்றும் ஜாக்கி ஷிராஃப் நடித்துள்ளனர். இந்த அதிரடி இந்த தொடர் ஜூலை 24ந் தேதியான இன்று அமேசான் MX பிளேயரில் இலவசமாக பார்க்கலாம்.

கண்ணப்பா: மஞ்சு விஷ்ணு நடித்துள்ள புராண திரைப்படமான கண்ணப்பா கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு, இவரது மகன் விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதி நடித்திருக்கும் படம் தான் 'கண்ணப்பா'. இந்தப் படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய்குமார், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மார்கன்: லியோ ஜான் பால் இயக்கத்தில் கடந்த மாதம் ரிலீசானது படம் 'மார்கன்'. விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, பிரிகிடா உள்ளிட்டோர் நடித்துள்ள கிரைம் திரில்லர் பாணியில் வெளியான இப்படம் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. மார்கன் படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X