தலைமைச் செயலகம் ஷூட்டிங்கில் ஸ்ரேயா கேட்ட கேள்வி! 1000 இடையூறு! இயக்குனர் வசந்த பாலன் திடீர் போஸ்ட்

சென்னை: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ5-யில் வெளியான தலைமைச் செயலகம் வெப் சீரியஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் வசந்தபாலன் தமிழ் தலைமைச் செயலகம் வெப் சீரிஸில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி குறித்து பதிவு போட்டு வெளியிட்டு இருக்கிறார். அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

ஜி5க்காக இயக்குனர் வசந்தபாலன் எழுதி, இயக்கிய தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் 2024 மே 14ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இதில் எட்டு அத்தியாயங்கள் இருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் சில விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இந்த தொடரில் நடித்த நடிகர் கிஷோர் ஸ்ரேயா ரெட்டி, பரத், சந்தான பாரதி, கனி குசுருதி, தர்ஷா குப்தா போன்ற பல நடிகர்களின் நடிப்பு இயல்பாகவும் கதைக்குத் தேவையானதையும் கொடுத்திருந்தனர்.

ott Entertainment

ஆனாலும் அதிகமாக கிஷோர், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது.வசந்த பாலம் இதற்கு முன்பே வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற பல படங்களை இயற்றி இருக்கிறார். அதிலும் இவருடைய தனித்துவம் மற்றும் இயல்பான கதை காரணமாகவே இவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறது. அங்காடித்தெரு படம் பலரையும் வியந்து பார்க்க வைத்தது.

தமிழ் சினிமாவின் பலரும் சொல்லப்படாத பக்கத்தை சொல்வதாலேயே வசந்தபாலன் இயக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்காடித்தெரு திரைப்படத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பவர்களின் வலி வேதனை காதல் அவமானம் போன்றவற்றை உடைத்து காட்டியதாலேயே கேரள அரசு ஜவுளி கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அமர்வதற்கு சேர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பையே வெளியிட்டு இருந்தார்கள்.

இது இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பெயர் வாங்கிய வசந்த பாலன் வெப் சீரிஸில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அதிலும் தன்னுடைய தனித்துவத்தை காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சில இடங்களில் வெப் சீரிஸுக்கான கதைக்களத்தோடு இவருடைய கதையும் போய்க்கொண்டிருக்கிறது.

ott Entertainment

ஆனால் இப்போது வெப்சீரிஸ்களில் அதிகமாக கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. காரணம் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லாதது மற்றும் கதையில் எதார்த்தத்தை கொண்டு வர வேண்டும் என்று தொடர்களில் அளவுக்கு அதிகமாக கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தலைமைச் செயலகத்தில் அந்த பார்மட் இல்லாமல் விலகி இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய facebook பக்கத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி குறித்து இன்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில், கொற்றவை ( sriya reddy ) Very powerful presence.. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம் "நல்லா வருதுல்ல ! எப்படி வருது ? நீங்க happy ஆ? சுழல் அளவுக்கு பேர் வாங்கிடுமா? அதை விட கம்மியா? இல்ல அதிகமா? விலங்கு,அயலி அளவுக்கு வெற்றியடையுமா? உங்களுக்கு புரொடக்சன் சப்போர்ட் பண்றாங்களா? சேனல் happyஆ? " என்று ஆங்கிலம் கலந்த தமிழில் ஒரு நாளைக்கு பல்வேறு வார்த்தைகளில் சுத்தி சுத்தி இணையத்தொடரின் தரம்,வெற்றி பற்றிய அக்கறையுடனே கேள்வி கேட்டபடியிருப்பார்கள்.

என் மேல் கொண்ட நம்பிக்கையிலே மட்டுமே இந்த தொடரில் நடிக்க சம்மதித்தார்கள்.அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்த போதும் I will do only for vasanthabalan என்று சொல்லி விட்டு எனக்காக தொடருக்குள் வந்தார்கள். தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி கொற்றவை தான்.. என்று வசந்த பாலன் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X