தீபாவளிக்கு தியேட்டரில் மட்டுமில்லை.. ஓடிடியிலும் சரவெடி தான்.. தங்கலான், லப்பர் பந்து வருதாம்!

சென்னை: இந்த தீபாவளிக்கு தியேட்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன், கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர், ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் மற்றும் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் வெளியாகின்றன. தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு போட்டியாக ஓடிடியிலும் சில பெரிய படங்கள் வரவுள்ளன.

தீபாவளிக்கு தியேட்டருக்குச் சென்று குடும்பத்துடன் புதிய படத்தை பார்த்து விட்டு வர பிளான் போடும் நபர்கள் முதல் ஷோவுக்கு ஒரு படம், 2வது ஷோவுக்கு ஒரு படம் என மொத்த நாளையும் தியேட்டரில் செலவழிக்கும் விதமாக புதிய படங்கள் வரிசைக் கட்டியுள்ளன.

diwali 2024 ott thangalaan

வீட்டில் குடும்பத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டு பலகாரத்தட்டுடன் புதிய படங்கள் வீட்டிலேயே பார்க்கப் போகிறோம் என்பவர்களுக்காக தங்கலான் மற்றும் லப்பர் பந்து படங்கள் ஓடிடியில் வெளியாகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னைக்கு வந்திருக்கணும்: "நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்" என பாட்டை போட்டு கோட் படத்தில் விஜயகாந்துக்கு பண்ண ட்ரிப்யூட்டை விட சிறப்பான மரியாதையை செலுத்திய லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் வேட்டையன் படத்துடன் போட்டிப் போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த லப்பர் பந்து திரைப்படம் அக்டோபர் 18ம் தேதியான இன்று ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்னமும் படம் தியேட்டரில் நல்லா தான் ஓடுகிறது என்பதால் வரும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வரும் என தெரிகிறது.

diwali 2024 ott thangalaan

தாமதமான தங்கலான்: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான தங்கலான் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. அதன் பின்னர் வெளியான விஜய் நடித்த கோட் திரைப்படம் எல்லாம் ஓடிடியில் வெளியாகி விட்ட நிலையில், தங்கலான் எப்போதான் ஓடிடிக்கு வரும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், வரும் தீபாவளிக்கு தங்கலான் திரைப்படமும் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தியேட்டரில் திருவிழா: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வருகிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்துள்ள பிரதர் படமும் சிவபாலன் இயக்கத்தில் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படங்களை தவிர ஓடிடி மற்றும் தியேட்டர்களில் மேலும், சில படங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X