Thangalaan OTT: ஓடியாங்க.. ஓடியாங்க.. கங்குவாவை தொடர்ந்து சத்தமே இல்லாமல் ஓடிடிக்கு வந்த தங்கலான்!

சென்னை: புஷ்பா 2 ஃபீவர் நாடு முழுவதும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வார நாட்களில் ரசிகர்களை கட்டிப்போட தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். நெட்பிளிக்ஸ் ஓடிடி சந்தாதாரர்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் அடுத்தடுத்து குவிந்துக் கொண்டே வருவதால் ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

லக்கி பாஸ்கர் படத்தைத் தொடர்ந்து அமரன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இந்தியளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், சத்தமே இல்லாமல் தங்கலான் படத்தையும் ஓடிடியில் வெளியிட்டுள்ளனர்.

thangalaan netflix


பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த தங்கலான் திரைப்படம் சுதந்திர தினக் கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வந்தது.

லால் சலாம் நிலைமை: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை தியேட்டருக்குச் சென்று அதிகளவில் மக்கள் பார்க்கவில்லை. ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளியாகி விடும் பார்த்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இதுவரை ஓடிடியில் வராமல் ரசிகர்களை நோகடித்து விட்டது. அதே போல தங்கலான் படமும் கடந்த 4 மாதங்களாக ஓடிடியில் வெளியாகாமல் ஆட்டம் காட்டி வந்த நிலையில், லால் சலாம் நிலைமை ஆகிவிடுமோ என பலரும் கிண்டல் செய்து வந்தனர். ஆனால், ஒருவழியாக இன்று ஓடிடியில் தங்கலான் வெளியாகி விட்டது.

நெட்பிளிக்ஸில் வந்துடுச்சு: நெட்பிளிக்ஸ் ஓடிடி வார வாரம் ஒரு புதிய தமிழ் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்து வருகிறது. இந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான மகாராஜா, கோட், லக்கி பாஸ்கர், அமரன் என அனைத்து படங்களுமே தியேட்டர் மற்றும் ஓடிடி என இரண்டிலும் காட்டுத்தனமாக ஓடி வருகின்றன. இந்நிலையில், அந்த வரிசையில் இன்று முதல் தங்கலான் படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியான் விக்ரமின் கடும் உழைப்புக்காகவே தங்கலான் ஓடிடியில் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கின்றனர்.

கங்குவாவை தொடர்ந்து தங்கலான்: கடந்த டிசம்பர் 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியான கங்குவா படம் வெளியான நிலையில், ஸ்டூடியோ க்ரீனி தயாரிப்பில் வெளியாகி பல மாதங்களாக பல பிரச்சனைகளால் ஓடிடி ரிலீஸ் தாமதமாகி வந்த தங்கலான் படமும் இன்று வெளியாகி விட்டது. சியான் விக்ரமின் சேது படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில், தங்கலான் படமும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X