Thangalaan OTT: தங்கலான் படத்தை தட்டித்தூக்கிய பெரிய ஓடிடி நிறுவனம்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும், விமர்சகர்கள் அனைவரும் சியான் விக்ரமின் நடிப்பையும் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் உழைப்பையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வியர்வையையும் மதித்து பாராட்டி வருகின்றனர்.
சுதந்திர தின வெளியீடாக நேற்று வெளியான தங்கலான், ரகு தாத்தா மற்றும் டிமான்ட்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் அதிக வசூலை தங்கலான் திரைப்படம் அள்ளியிருக்கிறது. அடுத்தபடியாக டிமான்ட்டி காலனி 2 உள்ளது. கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வெறும் 25 லட்சம் மட்டுமே அள்ளியிருக்கிறது.

முதல் நாளில் டபுள் டிஜிட் வசூல் வேட்டையாடிய தங்கலான் படம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் எங்கள் சொத்து: நிலத்தை உழுபவன் தான் அந்த நிலத்தின் சொந்தக்காரன் என்றும் தங்கத்தை விட நிலம் பெரியது என்றும் அதுதான் முக்கியம் என்கிற அரசியலை உள்ளடக்கி பா. ரஞ்சித் விக்ரமை வைத்து இப்படி ஒரு தரமான படைப்பை கொடுத்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
விஷுவல் ட்ரீட்: தங்கலான் படத்தில் சிஜி காட்சிகள் சொதப்பலாக இருந்தாலும் படம் விஷுவல் ட்ரீட்டாக மிரட்டுவதாகவும் நம் நாட்டில் எடுக்கப்பட்ட அப்போகலிப்டா படம் தான் தங்கலான் என்றும் கொண்டாடி வருகின்றனர்.
ஜாக்கெட் போடும் காட்சி: உள்ளாடை அணியாமல் பெண்கள் இருந்து வரும் நிலையில், இடைவேளைக்குப் பிறகு சியான் விக்ரம் ரவிக்கை துணிகளை வாங்கி வந்துக் கொடுக்க, பார்வதி மற்றும் அந்த ஊரில் உள்ள பெண்கள் அதை அணிந்துக் கொண்டு ஆட்டம் போடும் காட்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நெட்பிளிக்ஸில் தங்கலான்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சமீபத்தில் வெளியானது. அதற்கு முன்னதாக வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.
ஓடிடி ரிலீஸ் எப்போ?: விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் 2 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகிவிட்டது. இந்தியன் 2 திரைப்படம் ஒரு மாத இடைவெளியில் வெளியான நிலையில், தங்கலான் திரைப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நெட்பிளிக்ஸில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











