OTT Horror: ரத்தத்தை உறைய வைக்கும்.. வெறித்தனமான இந்தோனோஷிய பேய் படங்கள்.. ஓடிடி விபரம்!
சென்னை: இன்றைய காலத்தில் ஓடிடி தளங்களில் படங்களை பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹெச்.பி.ஓ, ஹாட் ஸ்டார் என சர்வதேச நாடுகளில் பிரதான ஓடிடி தளங்கள் இருந்தாலும் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஓடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றன. சரி, விஷயத்துக்கு வருவோம், உலகம் முழுவதும் உள்ள திரையுலகங்களுக்கு பேய் படம் என்றாலே அதில் மன்னாதி மன்னன், வில்லாதி வில்லனாக விளங்குவது இந்தோனேஷிய பேய்ப்படங்கள் தான். அப்படி இந்தோனேஷிய பேய் படங்களில் வெறித்தனமான ரத்தத்தை உறைய வைக்கிற பேய்ப் படங்களையும், அவை எந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதையும் இந்த தொகுப்பில் காணலாம்.

Suzzanna: Buried Alive: ஒரு தரமான பேய் படத்தை, டார்க் காமெடியுடன் பார்க்க நினைத்தால் இந்த படத்தை தேர்வு செய்யலாம். திருடர்கள் சில பேர் இணைந்து ஒரு வீட்டுக்குத் திருடச் செல்லும் போது அங்கிருந்த இளம் பெண்ணை தாக்கி, குத்தி, உயிர் பிரிவதற்கு முன்னர் உயிருடன் குழியில் போட்டு புதைத்து விடுகிறார்கள். அதன் பின்னர் அந்த பெண் பேயாக மாறி, தன்னை கொன்றவர்களை கொலை செய்கிறாள். தன்னைக் கொன்ற திருடர்களை கொல்வதற்கு ஒரு பிரத்யோகமான முறை ஒன்றைப் பின்பற்றி, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கொல்கிறாள். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த படத்தை இரவு நேரத்தில் பார்த்து பயந்து விடாதீர்கள். துள்ள துடிக்க ஒரு தரமான பேய் படம் இது.
Sewu Dino: இந்த படம் முந்தைய படத்திற்கு சவால் விடும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ள படம். இந்தோனேஷியா பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை முதல் நாளிலேயே குவித்த படங்களில் இதுவும் ஒன்று. ஒரு திகில் படத்தில் என்னவெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அவை அனைத்தும் இந்த படத்தில் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பகலில் பார்த்தாலும் உங்களுடன் யாராவது இருந்தால் நல்லது. இல்லையென்றால், ஒரு முரட்டு தைரியத்தை வர வைத்துவிட்டு படத்தை ப்ளே செய்யுங்கள். நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.

KKN di Desa Penari: நமது ஊர்களில் எல்லாம் பழங்காலத்து கதைகள் எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம். அவையெல்லாம் பேய் கதைகளாக இருந்தால், பழங்காலாத்து கதைகளை எல்லாம் சேர்த்து உண்மைக்கு நெருக்கமான கதை என்ற உணர்வை உருவாக்கும் படமாக இந்த படம் உள்ளது. படத்தின் முதல் ஃப்ரேமில் இருந்தே திகில் ஒட்டிக் கொள்ளும். படத்தில் பேய் வரும் காட்சிகள் மட்டும் இல்லாமல் படம் முழுவதும் திகலையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கும் படத்தின் பின்னணி இசை. பேய் படங்கள் பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு திரையிடல் பிளான் செய்தால் இந்த படத்தை முதல் படமாக திரையிடலாம். அந்த அளவுக்கு திகில். இந்த படம் அமேசான் பிரைமில் உள்ளது.

இந்த மூன்று படங்களையும் தவறாமல் பாருங்கள். குறிப்பாக அந்த மூன்றாவது படத்தின் டிரைலரைப் பார்த்தாலே திகில் ஆட்டோமேட்டிக்காக ஸ்டார்ட் ஆகிவிடும். 'ஓரளவுக்கு திகிலைத்தான் நம்ம உடம்பும் மனசும் தாங்கும்' எனும் ரசிகர்கள் தயவுகூர்ந்து இந்த படங்களை தவிர்க்கவும். உங்களுக்கு வேறு சில ஜாலியான படங்களை மற்றொரு தொகுப்பில் பரிந்துரை செய்கிறோம்.


Click it and Unblock the Notifications