Web series: மர்மம், திகில், திருப்பங்கள் நிறைந்த வெப் தொடர்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னை: டிஜிட்டல் ஓடிடி தளங்களில் தமிழ் பொழுதுபோக்கு உலகமானது பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. திரைப்படங்களுக்கு நிகராக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும் உயர்தரமான தமிழ் வெப் சீரிஸ்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. இத்தகைய தரமான தொடர்களின் வரிசையில், 2025 ஆம் ஆண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில சிறந்த தமிழ் வெப் சீரிஸ்களைப் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

வதந்தி: திகில் மற்றும் மர்மம் நிறைந்த வெப் தொடர்தான் 'வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை பெற்றது. இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கிய இத்தொடரில், எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒரு இளம் பெண் வெலோனியின் மர்மமான கொலையை மையமாக வைத்து, எஸ்.ஜே.சூர்யா ஒரு நேர்மையான காவல் அதிகாரியாக விசாரணையில் இறங்கி உண்மைகளைக் கண்டறிகிறார். ஒவ்வொரு எபிசோடிலும் ட்விஸ்ட்கள் நிறைந்ததாக இருக்கும்.

அயலி: பெண் கல்விக்கான போராட்டத்தையும் மையமாகக் கொண்ட 'அயலி' வெப்தொடர் ZEE5 தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் முத்துக்குமார் உருவாக்கிய இத்தொடரில், அபி நட்சத்திரா, அனமோல், லிங்டோ, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு ஊரில் கடவுள் நம்பிக்கையால், பருவமடைந்த பெண்கள் மேற்கொண்டு படிக்கவிடாமல் தவிக்கும் கிராமத்தில், தமிழ் செல்வி என்ற மாணவி தனது கல்வி உரிமைக்காகப் போராடுவதை இந்தத் தொடர் உணர்வுப்பூர்வமாக காட்சி படுத்தப்பட்டது.

தி வில்லேஜ்: திகில் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு விருந்தாக வந்த வெப்தொடர் தான் 'தி வில்லேஜ்', அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கிய இதில், ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், ஜான் கொக்கன், பூஜா, வி.ஜே. ஆஷிக் போன்ற நட்சத்திரப் பட்டாளம் நடித்தது. டாக்டர் கௌதம் (ஆர்யா) மற்றும் அவர் குடும்பத்தினர் மர்மமான சம்பவங்கள் நடக்கும் ஒரு கிராமத்தில் சிக்கிக்கொள்ள அதில் எப்படி மீண்டார்கள் என்பது தான் கதை. இந்த வெப் தொடர் ஒரு கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

Web series OTT Tamil OTT

மாடர்ன் லவ் சென்னை: 'மாடர்ன் லவ் சென்னை' அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஒரு அழகிய ஆந்தாலஜி தொடராகும். சென்னை நகரத்தின் வெவ்வேறு கோணங்களிலும், உறவுகளிலும் உள்ள காதலை ஆறு தனித்தனி கதைகளாக இது படம்பிடித்துக் காட்டுகிறது. பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜு முருகன் உள்ளிட்ட ஆறு திறமையான இயக்குனர்கள் இதை இயக்கியுள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் பலர் இசையமைத்துள்ள இந்தத் தொடர் தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரையைத் தழுவி உருவாக்கப்பட்டது.

ஓம் காளி ஜெய் காளி: நடிகர் விமலின் வித்தியாசமான நடிப்பில் JioHotstar-ல் வெளியான வெப் தொடர்
ஓம் காளி ஜெய் காளி. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல், பாவ்னி, திவ்யா துரைசாமி, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். காளி தெய்வத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் விமல் நடித்திருந்தார். பல திருப்பங்கள் கொண்ட இந்த தொடர் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

மாதகம்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான 'மாதகம்', ஒரு தீவிரமான குற்றப் பின்னணி கொண்ட விறுவிறுப்பான தொடராகும். இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கிய இதில், அதர்வா, மணிகண்டன் கே., நிகிலா விமல், திவ்யதர்ஷினி, கௌதம் மேனன், தில்னாஸ் இரானி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்தனர். நேர்மையான காவல் அதிகாரி அஷ்வத் (அதர்வா), பதாளம் சேகர் (மணிகண்டன்) எனும் பிரபல தாதாவைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் கதை, இரண்டு நாட்கள் நடக்கும் புலி-மான் வேட்டையாக விரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X