The Family Man 3 Review: ஃபேமிலி மேன் 3 விமர்சனம்.. எப்படி இருக்கு? பார்க்க வொர்த்தா? இல்லையா?
சென்னை: மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி இன்று அதாவது நவம்பர் 21 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கும் வெப் சீரிஸ் தி ஃபேமிலி மேன் சீசன் 3 வெப் சீரிஸ். முதல் இரண்டு சீசன்களை இயக்கிய ரஜ் & டி.கே., சுமன் குமார், துஷார் சேத் ஆகியோரே இந்த சீசனை இயக்கியுள்ளனர். சுமன் குமார் மற்றும் சுமித் அரோரா ஆகியோர் இணைந்து இந்த சீசனுக்கான கதையை எழுதி உள்ளார்கள்.
மனோஜ் பாஜ்பாய் உடன் பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, ஸ்ரேயா தன்வந்திரி, நிம்ரத் கவுர், ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கேதன் சோதா சிறப்பாக இசையமைத்துள்ளார். அதேபோல் ஜெய் சரோளா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெப் சீரீஸின் கதையைப் பொறுத்தவரையில் கொரோனா காலகட்டத்திற்கு பின்னர், இந்திய அரசு சீனாவின் பல செயலிகளை தடை செய்கிறது. இதற்கு காரணம், இந்தியாவில் வடகிழக்கு எல்லைப் பகுதியில் சீனா ஊடுருவ வேண்டுமென்றே சில கிராமங்களை அமைக்கிறது. இதற்கு இந்தியாவுக்கு எதிரான சிந்தனையில் உள்ள சில அமைப்புகளை சீனா தன்வசப் படுத்திக் கொள்கிறது. மேலும் தனது, திட்டத்தை முறியடிக்க லண்டனில் இருந்து காய்களையும் நகர்த்தி வருகிறது. இந்த அரசியல் சூழலை தெரிந்து கொண்ட இந்திய அரசு வடகிழக்குப் பகுதியில் அதி தீவிர கவனம் செலுத்துகிறது. இந்த போராட்டத்தில் சீனாவின் உள்குத்து தெரியாமல், சில கூலிப்படைகளும் மனோஜ் பாஜ்பாயைக் கொல்ல முயற்சிக்கிறது. இதை முறியடிக்க நடத்தப்படும் தாக்குதல், முயற்சிகள் அவற்றைக் கடந்து மனோஜ் பாஜ்பாய் எப்படி தடுக்கிறார் என்பது மீதிக்கதை.
விறுவிறுப்பு: மொத்தம் 7 எபிசோட்கள், ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் இருக்கின்றன. முதல் எபிசோடுக்குள்ளே கதை நகரத் தொடங்கிவிடுகிறது. இந்தியாவின் சமகால சூழலைக் கதையாகக் கொண்டு படமாக்கியுள்ளது அருமை. வெப் சீரீஸ் தானே கதையை எப்படி வேண்டுமானாலும் இழுக்கலாம் என்று எதுவும் செய்யாமல், காட்சிக்கு காட்சி கதையை சிறப்பாக நகர்த்தி உள்ளது இயக்குநர் குழு. ஒவ்வொரு எபிசோடும் முடியும்போது ஒரு படமே பார்த்து முடித்த திருப்தியை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று குழுவினர் கடுமையாக உழைத்து உள்ளார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

அருமை: நடிகர்கள் அனைவரும் காட்சிகளின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்கள். உயிரோட்டமான காட்சிகளுக்கு மேலும் உயிர் கொடுக்கும் விதமாக சிறப்பான ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜெய் சரோளா. மொத்தத்தில் ஜெய் சரோளா. மொத்ததில் மீண்டும் ஒரு திருப்திகரமான அதே நேரத்தில் விறுவிறுப்பான ஒரு வெப் சீரீஸைக் கொடுத்துள்ளார்கள். வெப் சீரீஸில் மைனஸ் என்றால், குடும்பக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் ஜவ்வாக இழுப்பதாக தோன்றுகிறது. மற்றபடி மொத்த சீரீஸும் சிறப்பு.


Click it and Unblock the Notifications











