54 வயசுலையும் இப்படியொரு டயட் மெயின்டெயின் பண்ணும் ஃபேமிலி மேன் நடிகர்.. 14 வருஷம் ஃபாலோ பண்றாரா?
மும்பை: பீகாரில் பிறந்து வளர்ந்த மனோஜ் பாஜ்பாய் தனது திறமையான நடிப்பால் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்தி படங்களை தாண்டி இவர் நடிக்கும் வெப்சீரிஸ்கள் எல்லாமே வேறலெவலில் ஹிட் அடித்து வருகின்றன. தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் நடித்து நாடு முழுக்க ஃபேமஸ் ஆகி விட்டார் மனோஜ் பாஜ்பாய். புஷ்பா 2 படத்தில் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 54 வயதாகும் இவரது வினோதமான டயட் பிளான் குறித்த தகவல்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.
சினிமா நடிகர்கள் பொதுவாகவே டயட் பிளானை சீராக கடை பிடித்து வருகின்றனர். தொடர்ந்து படங்களில் நடிக்க ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு காரணமாக தங்கள் உடலையும் அவர்கள் கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர். 54 வயது ஆகிறது மனோஜ் பாஜ்பாய்க்கு என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். 40 பிளஸ் ஏஜ் போலவே செம ஆக்டிவாக இருக்கும் இவரது உணவு ரகசியம் குறித்து இங்கே காணலாம் வாங்க..

யாரு இந்த மனோஜ் பாஜ்பாய்?: 1969ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பீகாரில் உள்ள பெல்வா எனும் இடத்தில் பிறந்தவர் தான் மனோஜ் பாஜ்பாய். 1994ம் ஆண்டு வெளியான பண்டித் குயின் படத்தில் நடித்து அறிமுகமானார். தமன்னா, சத்யா, பிரேம் கதா, வேதம், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் என பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தமிழில் விஷாலின் சமர் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான் படத்திலும் நடித்திருந்தார்.
தி ஃபேமிலி மேன்: ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் நடித்து பிரபலமானவர் மனோஜ் பாஜ்பாய். பிரியமாணி இவருக்கு ஜோடியாக அந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார். சாதாரண குடும்பத் தலைவன் மற்றும் அண்டர்கவர் ஏஜென்ட் என இவர் நடித்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தி ஃபேமிலி மேன் 2வில் சமந்தா இவருக்கு வில்லியாக நடித்திருந்தார். அடுத்து கில்லர் சூப் எனும் வெப்சீரிஸ் இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது. அதில், நாசர், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நோ டின்னர்: கடந்த 14 வருடங்களாக இரவு நேரத்தில் எந்தவொரு உணவையும் எடுத்ஹ்டுக் கொள்ளாமல் டயட் பிளானை மெயின்டெயின் பண்ணி தனது உடல் எடையை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறாராம் மனோஜ் பாஜ்பாய். காலை நேரத்தில் வெயிலில் ஓடி ஆடி வேலை பார்க்கும் போது உணவு உண்டால் போதும் என்றும் தூங்கும் போது இரவு வேளையில் உணவை தவிர்த்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது இவரது டயட் பிளான்.
அடுத்த சீசன் எப்போ?: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மெகா ஹிட் அடித்ததே இவர் நடித்த தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் தான். ராஜ் மற்றும் டிகே 2 பாகங்களை தொடர்ந்து ஃபர்ஸி வெப்சீரிஸை கடந்த ஆண்டு இயக்கி இருந்தனர். இந்நிலையில், ஃபேமிலி மேன் 3வது பாகத்துக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











