நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கு.. இந்திராணி முகர்ஜி ஓபனா பேசும் வெப்சீரிஸ்!

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதான இந்திராணி முகர்ஜி வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில், அந்த வழக்கில் தான் குற்றவாளி இல்லை என இந்திராணி முகர்ஜி விளக்கம் கொடுத்துள்ள ஆவண வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி 23ம் தேதியே இந்த வெப்சீரிஸ் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இப்படியொரு டாக்குமென்டரி சீரிஸ் வெளியானால் அது வழக்கை திசை திருப்பும் என எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.

OTT: The Indrani Mukerjea Story: Buried Truth documentary web series streaming now on Netflix

மும்பை நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளுக்கு இந்த வெப்சீரிஸை போட்டுக் காட்ட சொல்லி உத்தரவிட்ட நிலையில், பல தடைகளை தாண்டி பிப்ரவரி 29ம் தேதி லீப் இயர் நாளில் இந்திராணி முகர்ஜி வெப்சீரிஸ் வெளியாகி இருக்கிறது.

OTT: The Indrani Mukerjea Story: Buried Truth documentary web series streaming now on Netflix

ஷீனா போரா கொலை வழக்கு: பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பில் இருந்த பீட்டர் முகர்ஜியை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு மீடியாவில் தனக்கான இடத்தை பிடித்து பணியாற்றி வந்த இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகளை கொன்ற வழக்கு: பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் என்பவரை ஷீனா போரா காதலித்து வந்த நிலையில், முறை தவறிய காதல் என்பதால் இந்த கொலை நடைபெற்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தனது மகள் ஷீனா போராவை தான் கொலை செய்யவே இல்லை என வழக்கு விசாரணையில் தொடர்ந்து மறுத்து வந்த இந்திராணி முகர்ஜி தற்போது நெட்பிளிக்ஸ் ஆவண வெப்சீரிஸில் அந்த கொலை வழக்கு சம்பந்தப்பட்ட பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ஓடிடியில் ரிலீஸ்: ஆகஸ்ட் 21ம் தேதி 2015ம் ஆண்டு இந்திராணி முகர்ஜி ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த கொலை வழக்கு பற்றிய உறைய வைக்கும் பல உண்மைகளுடன் டாக்குமென்ட்ரி சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக The Indrani Mukerjea Story: Buried Truth என்கிற டைடிட்லில் நெட்பிளிக்ஸில் தற்போது பல தடைகளை தாண்டி இந்த வெப்சீரிஸ் வெளியாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X