The Kerala Story Ott:பல சர்ச்சையை சந்தித்த தி கேரளா ஸ்டோரி.. உண்மையா? உளறலா?ஓடிடியில் பாருங்கள்!

சென்னை: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த போதும் இப்படம் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களை கட்டாயப்படுத்தி, மதம் மாற்றம் செய்து, வெளிநாட்டுக்கு அழைத்து சென்று பயங்கரவாத அமைப்புகளால் தீவிரவாத பணிகளுக்கு பயன்படுத்த பட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இப்படத்திற்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது மட்டும் இன்றி, தமிழகத்திலும் மூன்றே நாட்களில் இப்படம் திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆனது.

The Kerala Story movie ott release january 12 on ZEE5

இப்படம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே, ஒரு பக்கம் சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், மற்றொருபுறம், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் வேட்டையாடி வந்தது. மேலும் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படம் என்கிற விமர்சனம் எழுந்த நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இல்லை, தீவிர வாதத்துக்கு எதிராகவே எடுக்கப்பட்ட படம் என்பதை தெளிவு படுத்தினர்.

மேற்குவங்க அரசு தடை: இதையடுத்து மேற்கு வங்கத்திற்கு இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை தடுக்க என்ன காரணம் என மேற்குவங்க அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதன் பின் மேற்குவங்கத்தில் படம் திரையிடப்பட்டது.

ஓடிடி ரிலீஸ் தேதி: இதன் பின் தி கேரளா ஸ்டோரி படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை Zee5 வாங்கியதை அடுத்து கடந்த ஆண்டு ஜூன் 23 Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என பார்க்கப்பட்ட நிலையில் படம் ஓடிடியில் வெளியாக வில்லை. அரசியல் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக படத்தில் இருந்து சில காட்சிகள் அகற்றப்பட்டதை அடுத்து கேரளா ஸ்டோரி திரைப்படம் வரும் 12ந் தேதி Zee5 வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு எழுந்த சர்ச்சையால் திரையரங்கில் படத்தை பார்க்காதவர்கள் இந்த படத்தை ஜாலியாக வீட்டில் இருந்தே பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X