The Night Manager Review: அசத்தலா? சொதப்பலா? 'தி நைட் மேனேஜர்' வெப் சீரிஸ் விமர்சனம்

Rating:
2.5/5

தி நைட் மேனேஜர்

நடிகர்கள்: அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர், சோபிதா திலிபாலா

இசை: சாம்.சிஎஸ்

இயக்கம்: சந்தீப் மோடி, பிரியங்கா கோஷ்

ஓடிடி: டிஸ்னி ஹாட்ஸ்டார்

சென்னை: இந்தியில் வெளியாகியிருக்கும் தி நைட் மேனேஜர் வெப் சீரிஸின் முதல் சீசனுடைய விமர்சனம்

தி நைட் மேனேஜர் என்ற வெப் சீரிஸ் கடந்த 2016ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்த வெப் சீரிஸ் அதே பெயரிலேயே தற்போது இந்தியில் ரீமேக்காகியிருக்கிறது. இதில் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். பிரியங்கா கோஷ், சந்தீப் மோடி இயக்கியிருக்கின்றனர்.

எப்படி இருக்கிறார் தி நைட் மேனேஜர்?

எப்படி இருக்கிறார் தி நைட் மேனேஜர்?

ஆங்கில மொழியில் எகிப்தில் நடந்த பிரச்னையோடு ஆரம்பிக்கும் வெப் சீரிஸ் இங்கு மியான்மரில் ரோஹிங்கியா இன மக்களை துரத்துவதோடு தொடங்குகிறது. எப்போதும் வெளி உலகத்துக்கு அதீத நல்லவராக, சமூகத்தில் பெரும் மனிதராக பிரகடனப்படும் ஒருவருக்குள் எவ்வளவு கருப்பு பக்கங்கள் இருக்கின்றன, அவருக்கு ஒரு நாட்டின் உச்சபட்ச அதிகார அமைப்பு எவ்வளவு உதவி செய்கிறது என்பதை தைரியமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள். அதுவும் இப்போது அதானியின் பிரச்னை இந்தியாவில் தலைதூக்கியிருக்கும் நேரத்தில் பெரும் பணக்காரர்களின் பித்தலாட்டங்களை மையப்படுத்தி வெப் சீரிஸ் வருவது ஆரோக்கியமான ஒன்றே.

ஒரு சிறுமியின் கொலை; ஆயுத கடத்தல் செய்யும் ஷெல்லியின் ( அனில் கபூர்) உலகத்துக்குள் நைட் மேனேஜரை (ஆதித்யா ராய் கபூர்) செல்ல வைக்கிறது. அங்கு சென்ற அவர் பல தடங்கல்களை தாண்டி ஷெல்லியுடன் நெருங்கினாரா என்பதுதான் முதல் சீசனின் சாராம்சம்.

நைட் மேனேஜராக கலக்கும் ஆதித்யா ராய் கபூர்

நைட் மேனேஜராக கலக்கும் ஆதித்யா ராய் கபூர்

ஹோட்டலின் நைட் மேனேஜராக ஆதித்யா கச்சிதம். தனது மிடுக்கான உடல் அவருக்கு பலம் கூட்டுகிறது. ஹோட்டலில் அவர் வாடிக்கையாளர்களை அணுகும் முறையில் ஒரு பக்குவமான மேலாளர் எப்படி நடந்துகொள்வார் என்பதை அச்சு அசலாக நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். சிறுமிக்கு உதவும் இடத்திலும், ரகசியம் கசிந்ததும் ரா அதிகாரியிடம் கோபப்படும் இடத்திலும், சிறுமி கொல்லப்பட்ட பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகி திரிவதிலும் ஸ்கோர் செய்கிறார் ஆதித்யா.

குறிப்பாக ஷெல்லியின் உலகத்துக்குள் சென்ற பிறகு தன்னை யாரும் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தையும்; அதேசமயம் தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற சுதாரிப்பையும் தனது நடிப்பில் நேர்த்தியாக கொண்டுவந்திருக்கிறார் நைட் மேனேஜர்.

நடிப்பு டான் அனில் கபூர்

நடிப்பு டான் அனில் கபூர்

அனில் கபூரின் நடிப்பை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதில் அவருக்கான ஸ்பேஸ் பயங்கரமாகவே இருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்தி காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். டான் என்றால் எப்படியும் இருக்கக்கூடாது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் அனில் கபூர். அவரது பார்வையும், அவரது முகமும் காட்டும் நடிப்பு அவ்வளவு அழகு. தனது நண்பரை காவல் துறை கைது செய்து அழைத்து செல்லும் இடத்தில் அமைதியாகவும், அதற்கு அடுத்ததாக அவரை எவ்வளவு கொடுத்தேனும் வெளியில் எடுத்துவிட வேண்டும் என்ற தவிப்பிலும் ஒரு டானாகவும், நண்பராகவும் அதகளம் செய்திருக்கிறார் மனிதர்.

மற்ற கலைஞர்களின் பங்களிப்பு

மற்ற கலைஞர்களின் பங்களிப்பு

அனில் கபூரின் நண்பர்களாக வருபவர்கள் தங்களுக்குகொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திர தன்மையை உணர்ந்து நடித்திருக்கின்றனர். அனில் கபூரின் கேர்ஸ் ஃப்ரெண்டாக வரும் சோபிதா துலிபாலாவுக்கு கவர்ச்சியை தாண்டி நடிப்பில் கவர்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. தொடர்ந்து தொலைபேசியில் அழுகும் சோபிதா எதற்காக அழுகிறார் என்பது குறித்து அடுத்த சீசனில் தெரியவரலாம். ஆனால் இந்த சீசனில் அது தொடர்பான ஒரு ஹிண்ட்டை கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ரா அதிகாரியாக வரும் திலோத்தமாவுக்கு நடிப்பதற்கு ஸ்பேஸ் இருக்கிறது. ஆனால் அவரால் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்ய முடியவில்லை. ஏனெனில், அவருக்கான காட்சிகள் இந்த சீசனில் சற்று குறைவாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.

கண்ணை கவரும் லொகேஷன்கள்

கண்ணை கவரும் லொகேஷன்கள்

வெப் சீரிஸுக்கு மிகப்பெரிய பலமே பிடித்திருக்கும் லொகேஷன்கள். சிம்லாவில் இருக்கும் வைட் ப்ளவர் ஹோட்டல் இயற்கை ரசிப்பாளர்களின் கண்களுக்கு விருந்து. சுற்றிலும் பனி மலைகள், எந்நேரமும் கொட்டிக்கொண்டிருக்கும் பனி என எங்கு நோக்கினும் வெள்ளை போர்வைதான். அதேபோல் இலங்கையில் கடற்கரை ஓரம் இருக்கும் சொகுசு பங்களா கொள்ளை அழகு. அந்த வீட்டை பார்த்தால் அங்கு ஒரு மணி நேரமாவது இருந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அந்த அளவுக்கு லொகேஷன் தேர்வு கனகச்சிதமாக இருக்கிறது. இயற்கையோடு ஒன்றிப்போக நினைப்பவர்கள் இந்த லொகேஷனை பார்த்தால் அவர்களது கண்களிலிருந்து சில நாள்களுக்கு அவை மறையாது என்பது நிச்சயம்.

வெப் சீரிஸின் இசை

வெப் சீரிஸின் இசை

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் சாம் சி.எஸ். இந்த தொடருக்கு இசையமைத்திருக்கிறார். அனில் கபூரின் இன்ட்ரோ சீனுக்கெல்லாம் சாமின் இசை பெரிதும் பலம் கூட்டியிருக்கின்றன. எந்த ஆரவாரமுமின்றி ஒரு தரமான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் சாம். ஏற்கனவே விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் தன்னை சாம் நிரூபித்திருந்தாலும் இந்த வெப் சீரிஸ் இசையும் அவரது பெயர் சொல்லும். வாழ்த்துகள் சாம் சி.எஸ்.

டீலிங், மீட்டிங் மட்டும்தான் டானின் வேலையா?

டீலிங், மீட்டிங் மட்டும்தான் டானின் வேலையா?

8 எபிசோடுகள் வரும் வெப் சீரிஸ்களுக்கு மத்தியில் சுருக்கமாக 4 எபிசோடுகளோடு இதனை முடித்துக்கொண்டாலும் சுவாரசியம் குறைவாகவே இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஆயுத கடத்தல்காரருக்கு கொஞ்சமேனும் விறுவிறுப்பான காட்சிகள் வைத்திருக்க வேண்டாமா. வெறுமனே டீலிங், மீட்டிங் என அத்தோடு முடிந்துவிடுகிறது டானுக்கான வேலை. வெல் கனெக்டட் பிசினஸ் மேன் என்ற ஒரு வசனம் வருகிறது. எனில் இந்தியாவின் உச்சபட்ச அதிகார அமைப்புகளோடு ஷெல்லி எப்படியெல்லாம் இணைந்திருக்கிறார். அவைகளுக்கு இவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதெல்லாம் குறித்து எதுவுமே இல்லை.

இந்திர தனுஷ் என்ற கதாபாத்திரத்தை ஃபோன் மூலம் கடைசி எபிசோடில் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த கதாபாத்திரம் அடுத்த சீசனில் வெளிப்படலாம். ஆனால் அந்தக் கதாபாத்திரம் யார் ஷெல்லிக்கு மேலே இருக்குமா, உச்சபட்ச அதிகாரம் படைத்திருக்குமா என அதுகுறித்து தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் எழவில்லை. 4 எபிசோடுகளோடு முடித்துக்கொள்ள முடிவெடுத்த இயக்குநர்கள் அவைகளுக்குள் ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்ப்பார்கள் என்பதை யோசிக்க மறந்துவிட்டார்கள்போல. இல்லை அடுத்த சீசனில் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்கள்போல.

வீக்கான பேஸ்மெண்ட்; பில்டிங் ஸ்ட்ராங்காகுமா?

வீக்கான பேஸ்மெண்ட்; பில்டிங் ஸ்ட்ராங்காகுமா?

தனது நண்பர்கள் எல்லாம் விலக ஆரம்பித்ததை உணர்ந்ததை அடுத்து ஷான் சென் குப்தாவை (ஆதித்யா) தன்னுடன் ஷெல்லி இணைத்துக்கொள்வதோடு முதல் சீசன் முடிகிறது. இருப்பினும் ஷானை தன்னுடன் ஷெல்லி இணைத்துக்கொள்வதற்கான ஒரு வலுவான காரணம்கூட சொல்லப்படவில்லை. தனது பிள்ளையை காப்பாற்றிவிட்டதால்தான் ஷானுக்கு அந்த ஆஃபரா. அப்படி இருந்தால்; ஒரு மிகப்பெரிய டான் இப்படியா எமோஷனலுக்கு அடிமையாக் இருப்பார் என பல பல கேள்விகள் எழுகின்றன.

அடுத்த சீசனுக்கான அடித்தளம் இது. அனைத்துக்கும் அதில் விடை இருக்கும் என மனதை தேற்றிக்கொள்ளலாம்தான். ஆனால் அடித்தளம் பலமாக இருந்தால்தானே பில்டிங் ஸ்ட்ராங்காக இருக்கும். அப்படி பார்க்கையில் இந்த அடித்தளம் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அடுத்த சீசனில் பார்க்கலாம் பேஸ்மெண்ட் மட்டும் வீக்கா இல்லை ஒட்டுமொத்த பில்டிங்கும் வீக்கா என்று.. நைட் மேனேஜருக்கு ஒருமுறை கை கொடுக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X