பாத்ரூம் ஷவரில் ஸ்பை கேமரா.. கணவரோட தம்பியுடன் கள்ள உறவு.. ’தி ரென்டல்’ ஓடிடி விமர்சனம் இதோ!

சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான The Rental படம் பக்காவான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா நடித்த வாலி திரைப்படம் போல இந்த படமும் உள்ளது. ஆனால், என்னவொரு ட்விஸ்ட் என்னவென்றால் தனது கணவரின் தம்பியுடன் காதல் வயப்பட்ட ஹீரோயினுக்கு நடக்கும் பிரச்சனையாக இந்த படத்தை ஹாலிவுட்டில் உருவாக்கியுள்ளனர்.

டேவ் ஃபிரான்கோ இயக்கத்தில் டேன் ஸ்டீவன்ஸ், ஆலிசன் ப்ரை, ஜெரிமி ஆலன் ஒயிட் மற்றும் ஷீலா வாண்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஏகப்பட்ட ஓடிடி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ott review

வீக்கெண்டை கொண்டாட ஒரு வீட்டை வாடகை எடுத்து ஜாலி பண்ண செல்லும் ஜோடிக்கு அந்த வீடு முழுவதும் ஸ்பை கேமராக்களை வைத்து தங்களை யாரோ கண்காணிப்பது தெரிய வர அங்கிருந்து எப்படி தப்பிக்கின்றனர். அவர்களை யார் வேவு பார்க்கின்றனர். அவர்களுக்குள் என்ன உறவு என திரைக்கதை ஒரு ஹாரர் த்ரில்லர் படம் போல நகர்வதால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

தி ரென்டல் கதை: வீக்கெண்டை ஒரு தனிப்பட்ட இடத்தில் கொண்டாட அந்த இடத்தை வாடகைக்கு எடுத்து ஒரு ஜோடி அங்கே வந்து தங்குகின்றனர். அந்த இடத்தில் திடீரென சில மர்மமான விஷயங்களும் நடக்கின்றன. அந்த வீட்டில் பல இடங்களில் ரகசியமாக கேமரா வைத்து தங்களை யாரோ வேவு பார்ப்பதை உணர்ந்து கொள்ளும் ஜோடி அது யார் என்று கண்டுபிடிக்கவும், அங்கிருந்து தப்பிகவும் போராடுவது தான் இந்த படத்தின் கதை. ஆனால், அவர்கள் இருவருக்குமான உறவு தான் பெரிய ட்விஸ்ட்டே.

பாத்ரூம் ஷவரில் கேமரா: தனது இணையுடன் வீக்கெண்டை கொண்டாட தனியாக ஒரு இடத்துக்கு சென்று குடித்து விட்டு கும்மாளம் அடித்து விட்டு அனைத்து விதமான ஜாலிகளையும் செய்து மஜா செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பாத்ரூம் ஷவரில் குளிக்கும் போது ஷவரில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு தனது குளியலை யாரோ படம் பிடித்து பார்த்து வருவதை அறிந்து தனது ஜோடியிடம் அந்த பெண் சொல்கிறாள். ஆனால், அதன் பின்னர் தான் தெரிகிறது படுக்கையறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ரகசிய கேமராவை பொருத்தி அந்த இருவரையும் யாரோ கண்காணிப்பதை அறிந்து அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க போராடுகின்றனர்.

கள்ள உறவு: கணவரின் தம்பியை காதலிக்கத் தொடங்கும் அந்த பெண் கணவரின் தம்பியுடன் உல்லாசமாக இருக்க பிளான் பண்னி செல்லும் கெட் அவேயில் தான் இத்தனை கூத்துகளும் நிகழ்வது ரசிகர்களுக்கு தெரியும் போது படம் பரபரப்படைகிறது. இந்த இருவரையும் கண்காணிப்பது யார், கடைசியில் இவர்களுக்கு என்ன ஆகிறது என்பது யூகிக்க கூடிய வகையிலேயே கொண்டு சென்றாலும் சுவாரஸ்யத்துக்கு கொஞ்சம் கூட குறைவில்லை.

ஓடிடியில் பார்க்கலாம்: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ள இந்த படத்தை ஏற்கனவே ஏகப்பட்ட இளைஞர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். டெக்னாலஜியின் வளர்ச்சி மற்றும் கள்ள உறவில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கொலை வெறி உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டு இயக்குநர் இந்த படத்தில் காட்டியுள்ளார். த்ரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். ஒரு முறை ட்ரை பண்ணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X