A Knight Of The Seven Kingdoms: இன்னைக்கு நைட் மொரட்டு சம்பவம் இருக்கு.. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களே ரெடியா?
சென்னை: கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு எப்போதுமே அதன் ப்ரீகுவல் கதையை வெப் சீரீயஸாக பார்க்க ஏகப்பட்ட ஆர்வம் உள்ளது. ஏற்கனவே ஹவுஸ் ஆஃப் த டிராகன் என்ற வெப் சீரீஸின் இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசன் வரும் ஜூன் மாதம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இதற்கிடையில் டிராகன்களே இல்லாத நைட் ஆஃப் த செவன் கிங்டம்ஸ் என்ற வெப் சீரிஸின் முதல் சீசன் ஜனவரி மாதத்தில் இருந்து ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அந்த வகையில் இந்த சீசனின் கடைசி எபிசோட் பிப்ரவரி 23ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
இந்த சீசனின் முதல் எபிசோடானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நான்காவது மற்றும் ஐந்தாவது எபிசோட்கள் பெரும் வரவேற்பைப் பெற்று இந்த சீசனையே மொத்தமாக தூக்கி நிறுத்தி உள்ளது. அதுவும் டங்கன் தி டால் என்று ஒரு போர் வீரனையும் மேட் கிங்கின் அப்பாவான ஏகான் டார்கேரியன் குறித்தும் பேசும் கதை. இதனால் இதன் மீதான ஆர்வம் உச்சத்தில் உள்ளது.

இப்படி இருக்கையில் இந்த சீசனின் கடைசி எபிசோட் பிப்ரவரி 23ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவுள்ளதால், ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். 5ஆவது எபிசோடின் இறுதியில் சர் டங்கனுக்காக சண்டையிட வந்த இளவரசர் பேலர் பிராக்ஸ்பியர் டார்கேரியனின் மரணத்துடன் முடிந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், கருப்பு நிற முடி கொண்ட டார்கேரியன் என்றைக்குமே மனிதாபிமானத்துடனே இருந்துள்ளார் என்பதற்கு அடையாளமாக அவரது கதாபாத்திரம் இருந்தது.
சர் டங்கன் எழுச்சி: இப்படி இருக்கையில், அடுத்ததாக என்ன நடக்கவுள்ளது என்ற ஆவல் பலருக்கும் உள்ளது. மொத்தமாக கூடி இருந்த மக்கள் திரளில் ஏகான் டார்கோரியனும் ஒரு பெண்ணும் மட்டுமே டங்கனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள். மொத்த கும்பலும் இளவரசர் ஏரியன் பிரைட்ஃபிளேம் டார்கேரியனுக்கே ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தார்கள்.

எதிர்பார்ப்பு: இரண்டு குழுக்களுக்கும் இடையிலான சண்டையில் சர் டங்கன் அணி வெற்றி பெறுகிறது. ஆனாலும் சர் டங்கனுக்காக சண்டையிட வந்த இளவரசர் பேலர் பிராக்ஸ்பியர் டார்கேரியனின் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தான். இப்படி இருக்கையில் இந்த சீசனின் கடைசி எபிசோடுக்காக மொத்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த கடைசி சீசன் ஐ.எம்.டி.பியில் எந்த அளவுக்கு புள்ளிகள் பெரும் என்ற கேள்விக்குறி பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











