Royals Review: என்னடா மன்னர் பரம்பரை.. மிடில் கிளாஸ் மாதவன், சீமராஜா வாடை அடிக்கும் ராயல்ஸ்!

சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள 'தி ராயல்ஸ்' வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பான பிரிட்ஜர்டன் எனும் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சுற்றிய கதை ரேஞ்சுக்கு உள்ளதாக சிலர் கூறி வரும் நிலையில், அந்த வெப்சீரிஸை பார்த்தால் பல வருடங்களுக்கு முன்பே "மன்னர் பரம்பரை காக்கா பிரியாணி" சாப்பிடும் அளவுக்கு கடனால் தேய்ந்து போயிருக்கும் நிலைமையை மிடில் கிளாஸ் மாதவன் படத்திலேயே விவேக் சொல்லிட்டாரே, அதே மேட்டர் தானே இந்த வெப்சீரிஸில் ஓடுகிறது என எண்ணத் தோன்றும்.

மேலும், சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்திலும் மன்னர் பரம்பரை இப்போ எப்படி இருக்கு என்பதை ட்ரோல் செய்திருப்பார்கள். அதே போன்றதொரு கதையைத்தான் இயக்குநர் பிரியங்கா கோஸ் கையிலெடுத்து நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக ஒரு அரச குடும்பம் கடனில் தத்தளிக்க அங்கே என்னவெல்லாம் டிராமா நடக்கிறது என்பதை வெப்சீரிஸாக உருவாக்கியுள்ளனர்.

The Royals Netflix Web Series Review in Tamil

இதில், இஷான் கட்டார் மற்றும் புமி பெட்னேகர் லீடு ரோலில் நடித்துள்ளனர். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அழகாக டப்பிங் செய்யப்பட்டு இருக்கும் இந்த வெப்சீரிஸை பார்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

தி ராயல்ஸ் கதை: 8 எபிசோடுகள் கொண்ட முதல் சீசனாக தி ராயல்ஸ் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இஷான் கட்டார், பூமி பெட்னேகர், நோரா ஃபதேகி, ஜீனத் அமன் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர். பச்சைக்கிளி முத்துச்சரம், சிவகாஅர்த்திகேயனின் டாக்டர் படங்களில் நடித்த மிலிந்த் சோமன் இந்த வெப்சீரிஸில் ராஜாவாக நடித்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு மோர்பூர் அரண்மனை மற்றும் அடுத்த ராஜாவாக வேண்டும் என்கிற எந்தவொரு விருப்பமும் இல்லாத மூத்த மகன் அவிராஜ் வெளிநாடுகளில் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மோர்பூர் அரண்மனையை பல ஆண்டுகளாக இளைய இளவரசர் பார்த்துக் கொண்டு வருகிறார். எந்த வேலையும் செய்யாமல் எந்தவொரு இலக்கும் இல்லாமல் இளவரசி என 3 வாரிசுகள் உள்ளனர். ராணி பத்மஜாவாக சாக்‌ஷி தன்வார் நடித்துள்ளார். ராஜாவின் உயிலில் அடுத்த அரசனாக அவிராஜை தேர்வு செய்திருக்கிறார். ஆனால், தனது சொத்துக்களை எல்லாம் மெளரீஸ் என்கிற 'கே' காதலருக்கு எழுதி வைத்துவிட, கடனை மட்டுமே தனது குடும்பத்தினருக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

The Royals Netflix Web Series Review in Tamil

கடனில் இருந்து தப்பிக்க நினைக்கும் மோர்பூர் ராஜ குடும்பத்தினருடன் எப்படியாவது ஒரு பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஹீரோயின் பூமி பெட்னேகர் மோர்பூர் மகாலை ஹோட்டலாக மாற்றுவதற்கு பதிலாக, ராஜ குடும்பத்தினருடன் பொது மக்கள் தங்கி இருந்து அவர்களின் கலாச்சாரத்தை தெரிந்துக் கொள்ளும் விதமாக ஒரு தொழிலை ஆரம்பிக்க நினைக்கிறார். இடையே இவருக்கும் ராஜா அவிராஜுக்கும் இடையே மோதலில் தொடங்கி காதல் மலர சோபியா கண்மணி சேகராக பூமி பெட்னேகர் போடும் பிசினஸ் திட்டங்கள் எல்லாம் சொதப்புகின்றன.

Take a Poll

கடைசியாக மோர்பூர் ராஜ குடும்பம் கடனில் இருந்து தப்பித்ததா? அரச குடும்பத்தை சேர்ந்த அவிராஜ் சாதாரண சிஇஓவான சோபியாவை கரம் பிடித்தாரா? அப்பாவின் மர்ம ரகசியம் அம்பலப்பட்டதா? இல்லையா? என்பது தான் இந்த மொத்த முதல் சீசன் தி ராயல்ஸ் வெப்சீரிஸின் கதையே.

பார்க்கலாமா? வேண்டாமா?: ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரண்மனைகள் எல்லாம் ஹோட்டல்களாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறி வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால், அதற்கு பின்னர் உள்ள கடன் பிரச்சனை, ராஜ குடும்பத்தினரின் இப்போதைய நிலை, கிழிந்த துணி உடுத்தியிருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க தங்க கோட் போட்டுக் கொண்டு போவோம் என இடம்பெறும் வசனம் என அனைத்துமே டாப் நாட்ச் தான். ஹீரோ இஷான் கட்டாரின் அழகை ரசிக்கவே இந்த வெப்சீரிஸை இளம் பெண்கள் தாராளமாக பார்க்கலாம். பூமி பெட்னேகர் நன்றாக நடித்திருந்தாலும், படுக்கையறை காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் டாமினேட் செய்தாலும், ஹீரோயின் தேர்வில் இன்னும் கொஞ்சம் பெட்டரான சாய்ஸ் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது.

எம்ஜிஆர் மாதிரி இருக்கும் இஷான் கட்டாருக்கு வயசான ஜோடி போல பூமி பெட்னேகர் தெரிவது உறுத்துகிறது. மறைந்த மகாராஜா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும் மகாராணி பாலிவுட் நடிகருடன் தொடர்பில் இருப்பது மற்றும் மகனுக்கு தாண்டிஸ் எனும் அரச குடும்பத்தில் நோரா ஃபதேகியை சம்மந்தம் பேச செல்லும் இடத்தில் சம்மந்தியுடன் உறவு கொள்வது என அந்தப்புர விஷயங்களையும் ஹெவி டிராமாவாக தூவி உள்ளனர்.

ரொமான்டிக், காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸில் காமெடிக்கு ரொம்பவே பஞ்சம் உள்ளது. மேலும், அரச குடும்பத்தினர் பார்ட்டி என்று சொல்லிவிட்டு வெறும் டிஜே போட்டு பப்பில் நடனமாடுவது போன்ற விஷயங்களையே இயக்குநர் காட்டியிருக்கிறார். வெப்சீரிஸ் முழுக்க அரசர்கள் என்று சொன்னாலும் அவர்களும் சாமானியர்கள் என்பதை சொல்ல முயற்சித்துள்ள இயக்குநர், கடைசியில் அந்த 3 வாரிசுகளுமே அரச குடும்பத்தினரா? இல்லையா? என்கிற கேள்வியையும் எழுப்பி குழப்பி விடுகிறார். அதற்கான பதிலை காண அடுத்த சீசன் வரை காத்திருக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X