இந்திய ரசிகர்களுக்கு செம ஜாக்பாட்.. ஓடிடியில் இலவசமாவே The Substance பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

சென்னை: கொராலி ஃபர்கீட் இயக்கத்தில் டெமி மூர் மற்றும் மார்கரேட் குவாலி போட்டிப் போட்டு நடித்த The Substance படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை வெளிநாடுகளில் நடத்திய நிலையில், இந்தியாவில் அந்த படத்தை எப்போ எப்படி பார்ப்பது என ரசிகர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நீண்ட விடுமுறை கிடைத்திருக்கும் நிலையில், ஓடிடி ரசிகர்களை உறைய வைக்கும் விதமாக தி சப்ஸ்டன்ஸ் திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியானது.

the substance demi more

அதுவும் இந்திய ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்யாமல் இலவசமாகவே அந்த படத்தை பார்க்கும் அறிய வாய்ப்பையும் முபி (mubi) ஓடிடி நிறுவனம் வழங்கியிருப்பது தான் இதில், கூடுதல் ஆச்சர்யம்.

தி சப்ஸ்டன்ஸ் கதை: 50 வயதை கடந்த நடிகை எலிசபெத் ஸ்பார்க்கிள் ஆயாவாகி விட்டார் என டிவி ஓனர் முடிவெடுத்து அவரை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்கிறார். இளம் மாடலை அவருக்கு பதில் தேடுகின்றனர். ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டால் ஒரு வாரம் இளமையாகவும் ஒரு வாரம் முதியவராகவும் வாழலாம் என்கிற கண்டிஷன் அப்ளையுடன் வரும் வில்லங்க மருந்தை போட்டுக் கொள்ளும் எலிசபெத்துக்கு என்ன என்ன ஆப்புகள் காத்திருக்கிறது என்பதை நிர்வாணக் காட்சிகளுடன் அடுக்கி கொடுத்து உலக ரசிகர்களை இயக்குநர் கவர்ந்துள்ளார். இந்த ஆண்டின் மிகவும் பயங்கரமான படமாகவும் இந்த படம் மாறியுள்ளது.

the substance demi more

ஓடிடியில் வெளியானது: தி சப்ஸ்டன்ஸ் படத்தை வெளிநாட்டினர் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு இருந்தது. இந்தியாவில் இந்த படத்தை ஓடிடியில் எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், தி சப்ஸ்டன்ஸ் படத்தை முபி ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். உடனடியாக முபி ஆப்பை இன்ஸ்டால் செய்து தி சப்ஸ்டன்ஸ் படத்தை ஓடிடி ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

இலவசமாக பார்க்கலாம்: முபி ஓடிடியை சப்ஸ்கிரைப் செய்ய ஆண்டுக்கு 299 ரூபாய் செலுத்த வேண்டும். முதல் ஒரு வாரத்துக்கு இந்திய ரசிகர்கள் இலவசமாக முபி ஓடிடியை தங்களின் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுத்து சப்ஸ்கிரைப் செய்து பார்க்கலாம். 7 நாட்களுக்கு முன்னதாக சப்ஸ்க்ரிப்ஷனை துண்டித்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. தி சப்ஸ்டன்ஸ் படம் மட்டுமின்றி ஏகப்பட்ட சர்வதேச அளவிலான தரமான படங்களும் இந்த ஓடிடி தளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

the substance demi more

குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் பார்க்காதீங்க: பாலியல் காட்சிகள் இல்லை என்றாலும் டெமி மூர் மற்றும் மார்கரேட் குவாலி இருவரது முழு நிர்வாணக் காட்சிகள் படம் நெடுகிலும் கொட்டிக் கிடப்பதால் குடும்பத்துடனும் குறிப்பாக குழந்தைகளுடனும் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. இளைஞர்களுக்கு இந்த வீக்கெண்ட் செம த்ரில்லர் அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X