Ott Release: இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: ஒவ்வொரு வாரமும் ஏராளமான நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் ஓடிடி படங்களுக்கும் நல்ல மவுசு இருந்து வருகிறது.

The trial to madhi movies and web series releasing on the OTT platforms this week

திரையரங்கு சென்று படம் பார்ப்பதை விட வீட்டிலிருந்து கொண்டு ஓடிடியில் படம் பார்ப்பதை பலர் விரும்புகின்றனர். அந்த வகையில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நெட்ஃபிளிக்ஸில்: பேர்ட் பாக்ஸ் பார்சிலோனா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான போஸ்ட் அபோகாலிப்டிக் திகில் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். தந்தை மற்றும் மகள் ஒரு டிஸ்டோபியன் எதிர்காலத்தைத் தக்கவைக்க மேற்கொள்ளும் முயற்சியை சுற்றி கதை நகர்கிறது. இப்படம் ஜூலை 14ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

The trial to madhi movies and web series releasing on the OTT platforms this week

தி ட்ரையல் (இந்தி): இயக்குநர் சுபர்ன் வர்மாவால் இயக்கப்பட்ட தி ட்ரையல் தொடரில் நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இல்லத்தரசியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 14ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

Zee5(இந்தி) : மாயா பஜார் ஆன் சேல் ஒரு நகைச்சுவைத் தொடராகும். இதில், நவ்தீப் பல்லபோலு, ஈஷா ரெப்பா, நரேஷ் விஜய கிருஷ்ணா, ஹரி தேஜா, ஜான்சி லக்ஷ்மி, மெய்யாங் சாங், சுனைனா மற்றும் கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது ஜூலை மாதம் Zee5 இல் 14ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

The trial to madhi movies and web series releasing on the OTT platforms this week

Madhi( தெலுங்கு) : நாக தனுஷ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீராம் நிம்மலா, ரிச்சா ஜோஷி, சினேகா மாதுரி சர்மா, ஸ்ரீகாந்த் பிரோஜு, யோகி காத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம் கிஷன் தயாரிக்கும் ரொமான்ஸ் படத்திற்கு பிவிஆர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தை அமேசான் பிரைமில் பணம் கட்டி பார்க்கலாம்.

ருத்ரமாம்பாபுரம் (மலையாளம்) : மகேஷ் பாண்டு இயக்கத்தில் NVL ஆர்ட்ஸ் சார்பில் நந்தூரி ராமு தயாரித்திருக்கும் இப்படத்தில் அர்ஜுன் ரெட்டி, பிரமீளா, அஜய் கோஷ், சுபோதயம் சுப்பாராவ், நந்தூரி ராமு, ஜனார்தன், ஜெமினி கிரண், வம்சிதர் சாகர்லாமுடி, ஷங்கர், நரசிம்ம மூர்த்தி ராஜு, டி.வி.சுப்பாராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த மலையாளப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X