வெற்றிமாறனின் வடசென்னை பார்த்து இருப்பீங்க.. ‘தென்சென்னை’ படத்தை இந்த ஓடிடியில் பார்க்கலாம்!

சென்னை: புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் தான் 'தென் சென்னை' அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இதில், முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின், இந்த படதிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

then chennai tentkotta

குறைந்த அளவு திரையரங்குகளில் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயற்சிகளுக்கு பெரும் பாராட்டைத் தந்தனர். இந்த நிலையில் இப்படம் டென்ட்கொட்டா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

then chennai tentkotta

இந்த படத்தில் நடிகர் ரங்கா ரங்கா - ஜேசன் எனும் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ரியா - மேகா (கதாநாயகி), இளங்கோ குமணன் - டோனி (கதாநாயகன் மாமா) , சுமா - மரியா (கதாநாயகன் தாய்)
தாரணி - தாரா (கதாநாயகன் அக்கா), நிதின் மேஹ்தா - ருத்ரா (வில்லன் 1), திலீபன் - சிவக்குமார் (இன்ஸ்பெக்டர்), தன்ஷிவி, நித்யநாதன் - கிருஷ்ணா (குழந்தை), வத்ஷன் எம் நட்ராஜன் - எஸ் கே (வில்லன் 2) உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

then chennai tentkotta

ரங்கா இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை தனது கேமரா கண்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் எம். சரத்குமார். எடிட்டிங் தொகுப்பாளராக இளங்கோவன் சிறப்பான பணியை செய்ய ஜென் மார்ட்டின் இசையில் பாட்லகளும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

then chennai tentkotta

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X